Bird Flu : மீண்டும் பறவை காய்ச்சல் பயம்.. இந்த நேரத்தில் பால் மற்றும் முட்டைகளை உட்கொள்ளலாமா? நிபுணர்கள் கருத்து இதோ!
Bird Flu : பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் முதன்முதலில் 1996 இல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பரவியது. சமீப ஆண்டுகளில் பறவைகள் மற்றும் பாலூட்டிகளில் இந்த நோய் ஒரு பெரிய அதிகரிப்பு உள்ளது.
Bird Flu: உலகையே ஆட்டிப்படைத்துள்ள கொரோனா வைரஸின் அச்சம் தற்போது குறைந்துள்ளது. இப்போது H5N1 எனப்படும் பறவைக் காய்ச்சலின் அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. உலகின் சில நாடுகளில் பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் பீதி வாட்டி வதைத்துள்ளதால், எல்லையோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வைரஸ் பசுவின் பாலில் கண்டறியப்பட்டுள்ளது, முட்டை, பால் மற்றும் கோழி இறைச்சியை உட்கொள்ளும் முன் கவனமாக இருக்க வேண்டும். பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
பறவைக் காய்ச்சல் இந்த நாட்டில்தான் முதலில் தோன்றியது
இந்த வைரஸ் முதன்முதலில் 1996 இல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் உலகம் முழுவதும் பரவியது. சமீப ஆண்டுகளில் பறவைகள் மற்றும் பாலூட்டிகளில் இந்த நோய் ஒரு பெரிய அதிகரிப்பு உள்ளது. பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது அவற்றின் எச்சங்கள் மூலம் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது. மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.
சரியாக சமைத்த முட்டை அல்லது பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட (சுத்திகரிக்கப்பட்ட) பால் உட்கொள்வதன் மூலம் வைரஸ் பொதுவாக பரவாது. ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் டாக்டர். ராகுல் அகர்வால் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்கூறினார்.
பறவை காய்ச்சல் வந்தாலே பால், முட்டை போன்றவற்றை சாப்பிட மக்கள் அச்சப்படுகின்றனர். முதன்மையாக பறவைக் காய்ச்சல் பறவைகளுக்கு இடையே அவற்றின் உமிழ்நீர், மலம் மற்றும் சுவாச சுரப்பு மூலம் பரவுகிறது. பின்னர் அது மனிதர்களுக்கும் மற்ற பாலூட்டிகளுக்கும் பரவுகிறது.
அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் உள்ள எட்டு மாநிலங்களில் உள்ள 29 பண்ணைகளில் வளர்க்கப்படும் பசுக்கள் மற்றும் கோழிகளில் இந்த வைரஸ் பரவி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முட்டை மற்றும் பால் மூலம் தொற்று பரவுமா?
சில அரிதான மனித நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும், இவை பொதுவாக பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் வாய்ப்புகள் அதிகம். இந்த வைரஸ் பாலில் கண்டறியப்பட்டதால், முட்டை மற்றும் பால் சாப்பிடலாமா என்று பலர் யோசித்து வருகின்றனர்.
முட்டைகள் உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கின் போது கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றன. இது மாசுபடுவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கிறது. வீட்டில் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது மிகவும் முக்கியம். நன்றாக சமைத்து உண்ண வேண்டும். அதன் மஞ்சள் கரு கூட பச்சையாக இருக்கக்கூடாது. மேலும், எப்போதும் கைகளை கழுவ வேண்டும்.
பாலின் பாதுகாப்பு பேஸ்டுரைசேஷனைப் பொறுத்தது. பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ்களைக் கொல்லும். வணிக ரீதியாக கிடைக்கும் அனைத்து பாலும் இந்த செயல்முறைக்கு உட்படுகிறது. இவ்வாறு பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட (சுத்திகரிக்கப்பட்ட) பால் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது.
பறவைக் காய்ச்சல் மற்றும் உங்கள் உணவைப் பற்றி அக்கறை இருந்தால், பாதுகாப்பான கையாளுதல், சுகாதாரம் ஆகியவற்றைப் பராமரிக்கவும். நன்கு சமைத்த முட்டைகளை உண்ணுங்கள். பேஸ்சுரைஸ் செய்யப்பட்ட பால் பொருட்களை அதிகம் பயன்படுத்துங்கள். முட்டை மற்றும் பாலில் இருந்து பறவைக் காய்ச்சல் வருவதற்கான ஆபத்து மிகக் குறைவு என்பதை நினைவில் கொள்வது அவசியம். சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் ஆபத்து இல்லை.
டாபிக்ஸ்