Birds Flu : போலந்தில் அதிர்ச்சி! பூனைகளை கொல்லும் பறவைக்காய்ச்சல் வைரஸ்! எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!
Birds Flu : போலந்தில் பறவைக்காய்ச்சல் பூனைகளை கொன்று வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பறவைக்களில் காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமி மனிதர்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது.

போலந்து முழுவதும் அதிக எண்ணிக்கையிலான பூனைகள் திடீரென கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதியளவுக்கு மேலான இந்த பூனைகளின் சாவுக்கு ஹெச்5 என்1 என்ற வைரஸ்களே காரணமாக இருந்தது.
மேலும் இந்த வைரஸ்கள் ஏற்கனவே பறவை காய்ச்சலுக்கு காரணமானவையாக இருந்துள்ளன. மொத்தம் 47 பூனைகளை (ஒன்று காட்டுப்பூனை) சோதனை செய்ததில் 29 பூனைகள் ஹெச்5என்1 என்ற வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. இது ஒரு புவிப்பரப்பில், ஒரு நாட்டில் அதிகளவில் பூனைகளுக்கு தொற்று ஏற்பட்டிருப்பது முதல் முறையாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பறவைகளில் உள்ள காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டவை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது எளிதாக புதிய தொற்றை ஏற்படுத்தக்கூடியது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.