தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Raw Milk: முகப்பருவா.. சுருக்கமா? - காய்ச்சாத பால் இருக்க, கவலை எதுக்கு? - வெறும் பாலில் இருக்கும் பயன்கள்!

Raw Milk: முகப்பருவா.. சுருக்கமா? - காய்ச்சாத பால் இருக்க, கவலை எதுக்கு? - வெறும் பாலில் இருக்கும் பயன்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 21, 2023 07:00 AM IST

முகத்தை பளபளப்பாக்க காய்ச்சாத பாலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

காய்ச்சாத பாலின் பயன்கள்!
காய்ச்சாத பாலின் பயன்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

காய்ச்சாத பாலில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். கூடவே ஹெல்தியான கொழுப்பும் கிடைக்கிறது. இதை நீங்கள் முகத்தில் அப்ளை செய்யும் போது, உங்கள் சருமத்துக்கு இது ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல் ஈரப்பதத்தையும்  கொடுக்கும்.

முகத்தில் உள்ள அழுக்குகளை அகற்றலாம்.

காய்ச்சாத பாலில் சருமத்தை தூய்மைப்படுத்துதல் செயல்முறையும் நடக்கும். முகத்தில் உள்ள அழுக்குகளை அகற்றுதல், அதிகமான ஆயில்தன்மையை களைதல் உள்ளிட்ட பலவற்றிற்கு இதனை பயன்படுத்த முடியும்.

இறந்த போன செல்களை அகற்றும்.

காய்ச்சாத பாலில் உள்ள லேட்டிக் ஆசிட் இறந்த போன செல்களை அகற்றி, சருமத்தை பிரகாசமாக ஜொலிக்க வழிவகுக்கும்.

முகப்பருக்களை அகற்றும்.

பாலில் இருக்கக்கூடிய பாக்டீரியாவை எதிர்க்க கூடிய சில பொருட்கள், முகத்தில் உள்ள பருக்களை குறைப்பதோடு, எதிர்காலத்தில் அது வருவதையும் குறைக்கும்.

இளமைதோற்றம். 

பாலில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்ஸ், வைட்டமின் ஏ, லேட்டிக் ஆசிட் உள்ளிட்டவை நம் வயதை கொஞ்சம் குறைத்து இளமையான தோற்றத்தை கொடுக்கும். அதே போல முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் மற்றும் கோடுகளையும் இது அகற்றும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்