தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Sangupoo Tea : உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் அடித்து விரட்டும் சங்குப்பூ டீயில் உள்ள நன்மைகள்!

Benefits of Sangupoo Tea : உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் அடித்து விரட்டும் சங்குப்பூ டீயில் உள்ள நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
Apr 26, 2024 10:05 AM IST

Benefits of Sangupoo Tea : சங்குப்பூ தேநீர் பருகுவதால் உங்கள் உடலில் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Sangupoo Tea : உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் அடித்து விரட்டும் சங்குப்பூ டீயில் உள்ள நன்மைகள்!
Benefits of Sangupoo Tea : உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் அடித்து விரட்டும் சங்குப்பூ டீயில் உள்ள நன்மைகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

சங்குப்பூ டீயில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உடலில் உள்ள பல்வேறு நோய்களை அடித்துவிரட்டும் சக்தி வாய்ந்தது.

சங்குப்பூவில் வெள்ளை நிற சங்குப்பூ மற்றும் நீல நிற சங்குப்பூக்கள் உள்ளன. இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள், நமது உடலில் சேரக்கூடிய பல வித நோய் கிருமிகளையும் விரட்டியடித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

தேவையான பொருட்கள்

சங்குப்பூ – 10

எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்

தேன் – ஒரு ஸ்பூன்

செய்முறை

(இதை அலசிவிட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு மிதமான தீயில் அதன் வண்ணம் தண்ணீரில் இறங்கும் வரை கொதிக்கவிடவேண்டும்)

இதை காலை வெறும் வயிற்றில் அல்லது மாலையில் பருகலாம். இதை அனைவரும் பருகலாம். நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியது.

கொதித்து வந்தவுடன் வடிகட்டி, சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகலாம் அல்லது வெதுவெதுப்பாக சிறிது உப்பு சேர்த்தும் பருகலாம். கிரீன் டீபோல் இருக்கும். துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.

சங்குப்பூ டீயை பருகுவதால் ஏற்படும் நன்மைகள்?

முதுமையை தள்ளிப்போடும் தன்மைகொண்டது. இளமையை தக்கவைத்து, முதுமையை தள்ளிப்போடுகிறது.

முகத்தில் ஒளிந்துள்ள சுருக்கத்தை நீக்கும் தன்மை கொண்டது.

தலையில் உள்ள நுண்துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, தலைமுடி வளர்ச்சியைத் தூண்டி, முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.

குடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, கல்லீரலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து, உடலில் உள்ள சர்க்கரையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இதில் உள்ள ஃப்ளேவனாய்ட்கள் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடலை பலவித நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது.

உடலில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்பை நீக்க உதவுகிறது.

அல்சரை குணப்படுத்துகிறது. செரிமான மண்டலத்தை சரிசெய்து, குடலில் தங்கியிருக்கக்கூடிய கெட்ட வாயுக்களை அடித்து வெளியேற்றுகிறது.

வயிற்றில் உள்ள எரிச்சலை போக்குகிறது. உடல் வெப்பத்தை சீராக வைக்க உதவுகிறது. மனஅழுத்தத்தை குறைத்து, எப்போது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

சுவாச கோளாறை சரிசெய்யும். சளி மற்றும் இருமலை சரிசெய்து, நுரையீரலுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்தது.

உடல் எடையை குறைக்க விரும்புவோர், இந்த டீ யை பருகலாம். குடல் புழுக்களை நீக்கி, சிறுநீரை பெருக்கி, கருப்பை தொடர்பான பிரச்னைகள் அனைத்தையும் சரிசெய்யும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்