Ginger-Garlic Juice Benefits : இஞ்சி - பூண்டு தேன் சாறு! எப்போது, ஏன் பருகவேண்டும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?-ginger garlic juice benefits ginger garlic juice when and why to sip what are the benefits of this - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ginger-garlic Juice Benefits : இஞ்சி - பூண்டு தேன் சாறு! எப்போது, ஏன் பருகவேண்டும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Ginger-Garlic Juice Benefits : இஞ்சி - பூண்டு தேன் சாறு! எப்போது, ஏன் பருகவேண்டும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Apr 15, 2024 12:58 PM IST

Benefits of Ginger - Garlic Juice : இது முற்றிலும் இயற்கையில் இருந்த தயாரிக்கப்படுவதால், இது எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவிதில்லை. நீங்கள் ஏதேனும் சிகிச்சையில் இருப்பவர்கள் என்றால், உங்கள் மருத்துவரின் பரிந்துரையைக்குப் பின்னரே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Ginger-Garlic Juice Benefits : இஞ்சி - பூண்டு தேன் சாறு! எப்போது, ஏன் பருகவேண்டும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
Ginger-Garlic Juice Benefits : இஞ்சி - பூண்டு தேன் சாறு! எப்போது, ஏன் பருகவேண்டும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

பூண்டு - 10 பல்

கொத்தமல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்

தேன் – கால் கப்

செய்முறை

இஞ்சியை நன்றாக தோலை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவேண்டும்.

பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பூண்டின் தோலை உரித்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி விதை நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த கலவையை வடிகட்டியைப் பயன்படுத்தி வடித்து சாறு எடுத்துக்கொள்ளவேண்டும். அரைத்த சாற்றை அப்படியே அசையாமல் 20 நிமிடங்கள் வைத்திருக்கவேண்டும்.

பின்னர் மேலே தெளிந்துள்ள நீரை மட்டும் பொறுமையாக மாற்றிக் கொள்ளவேண்டும். இந்தச்சாறுடன் தேன் கலந்து பருகவேண்டும். கீழே படிந்துள்ள வெள்ளை நிறத்தில் உள்ள கசடை நீக்கி விடவேண்டும்.

இந்த ஆரோக்கியமான இஞ்சி பூண்டு பானத்தை வாரம் ஒருமுறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் பித்தம், கொழுப்பு அளவு மற்றும் ரத்த அழுத்தம் குறையும். மேலும் இதை பருகுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இஞ்சி, பூண்டு இரண்டும் சுவாசக்கோளாறுகளை சரிசெய்யக்கூடிய தன்மை கொண்டவை. இது மாதவிடாய் பிரச்னைகளையும் தீர்க்கவல்லது. இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உடலுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொடுக்கிறது. செரிமான மண்டலத்தை காக்கிறது.

நோய்களை அண்டவிடாமல் காக்கிறது

இஞ்சியில் ஆவியாகக்கூடிய எண்ணெய்கள் உள்ளது. அதில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கக்கூடிய ஒன்றாக இஞ்சியை மாற்றுகிறது. இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், சாதாரண காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றை அண்டவிடாமல் காக்கிறது.

பூண்டில் உள்ள சல்ஃபர் என்ற உட்பொருள் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. பூண்டில் வைரஸ்க்கு எதிரான குணங்களும் உள்ளது. இதுவும் சளி மற்றும் இருமலை போக்குகிறது. சளி, இருமல் நமக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்னையாகும். எனவே வாரம் ஒருமுறை இந்த பானத்தை நாம் பருகினால்போதும். இவை நம்மை அண்டாது காக்கும்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குவது மட்டுமல்ல எடை குறைப்பிலும் உதவுகிறது. இஞ்சி மற்றும் பூண்டு வயிறு செரிமானத்துக்கு உதவுகிறது. உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சுக்களை அடித்து வெளியேற்றுகிறது. உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது. உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது.

செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது

இஞ்சி – பூண்டு சாறு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. இது குடல் இயக்கத்தை அதிகரித்து, மலச்சிக்கல், செரிமானம் போன்ற கோளாறுகளையும் சரிசெய்கிறது.

சுவாச கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கிறது

இஞ்சி மற்றும் பூண்டில் பாக்டீரியாவுக்கு எதிரான தன்மைகள் உள்ளது. அது சுவாச கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது. இஞ்சி-பூண்டு சாறு, சுவாசப்பாதையில் நெரிசல்களை குறைத்து, தொண்டை கரகரப்பை குணப்படுத்துகிறது. இதை பருகினால், சளி, இருமல், காய்ச்சல் என அனைத்தையும் குணப்படுத்துகிறது.

இது முற்றிலும் இயற்கையில் இருந்த தயாரிக்கப்படுவதால், இது எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவிதில்லை. நீங்கள் ஏதேனும் சிகிச்சையில் இருப்பவர்கள் என்றால், உங்கள் மருத்துவரின் பரிந்துரையைக்குப் பின்னரே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.