தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lok Sabha Election 2024: வெள்ளை சட்டை.. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பே வந்த அஜித்!

Lok Sabha Election 2024: வெள்ளை சட்டை.. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பே வந்த அஜித்!

Aarthi Balaji HT Tamil
Apr 19, 2024 06:59 AM IST

நடிகர் அஜித் தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்து இருக்கிறார்.

அஜித்
அஜித்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.06 கோடி, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.17 கோடி 3ம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும். தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்.

வாக்காளர் அடையாள அட்டை உங்களிடம் இல்லையென்றால் பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டை, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் அடையாள அட்டைகள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டைகள் ஆகிய 13 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்து உள்ளார்.

15 நிமிடம் முன்பே வாக்குச்சாவடிக்கு வந்த அஜித்

நடிகர் அஜித், ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடம் முன்பே வாக்குச்சாவடிக்கு வந்து உள்ளார். ஏராளமான ரசிகர்கள் அவரின் வருகையை அறிந்து கூட்ட நெரிசல் ஏற்படும் என்ற காரணத்தினால் முன்பே அவர் வருகை தந்து இருக்கிறார். சரியான 7 மணிக்கு முதல் நபராக அவர் தனது வாக்கை செலுத்திவிட்டு சென்று இருக்கிறார். 

தான் வாக்கு செலுத்திய பிறகு பத்திரிக்கையாளரிடம் காண்பித்துவிட்டு புகைப்படம் எடுத்து சென்றார் அஜித். வெள்ளை சட்டை, விடாமுயற்சி பட லுக்கில் அசத்தலாக வந்து தனது வாக்கை செலுத்திவிட்டு சென்ற அஜித்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஏற்கனவே சென்னையில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த அஜித்தை ரசிகர்கள் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது டென்ஷனான அஜித் ரசிகரின் செல்போனை பிடுங்கி பின்னர் அறிவுரை கூறி செல்போனை திருப்புக் கொடுத்தார். இது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்கவே அவர் 15 நிமிடம் முன்பே இந்த முறை வாக்குச்சாவடிக்கு வந்து உள்ளார். 

தமிழகம், புதுச்சேரியில் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1.90 லட்சம் போலீசார் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் தோ்தலை அமைதியாக நடத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம். மாலை 6 மணி வரை வரும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும் , டோக்கன் பெற்ற கடைசி வாக்காளர் வரை வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்