Benefits of Jaggery Water : இரவு உறங்கச் செல்லும் முன் இந்த ஒரு பானம் போதும்! உடலின் பல வியாதிகளை துரத்தியடிக்கும்!
Benefits of Jaggery water : அனீமியாவை சரிசெய்யும். மாதவிடாய் கால உடல் சோர்வுகளில் இருந்து பெண்களை காக்கும். செரிமான திரவங்களை தூண்டும். நார்ச்சத்து உடல் உள் உறுப்புக்களை சுத்தம் செய்யும். இதை தினமும் பருகலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.
நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
ஒரு சிறிய துண்டு வெல்லத்தை உறங்கச் செல்லும் முன் இப்படி சாப்பிட, அது உங்கள் உடலில் உள்ள பல்வேறு வியாதிகளை துரத்தியடிக்கும்.
தேவையான பொருட்கள்
வெல்லம் – ஒரு துண்டு
(வெல்லம், சர்க்கரை என அனைத்தும் நடக்கு கரும்பில் இருந்து கிடைக்கிறது. வெல்லம் வெளிர் பழுப்பு நிறம் முதல் அடர் பழுப்பு நிறம் வரை இருக்கும். வெல்லம் அடர் பழுப்பு நிற வெல்லத்தில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. வெல்லத்தில் அதிகளவில் ரசாயனங்களைச் சேர்த்து, வெல்லத்தை வெண்மையாக்கப்படுகிறது.
வெல்லத்தில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், சர்க்கரை, வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் வெல்லத்தில் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக பருவநிலை மாற்றம் காரணமாக சிலருக்கு ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அவற்றில் இருந்து விடுபட வெல்லம் உதவுகிறது)
ஏலக்காய் – 1
(நரம்பு மண்டல ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சிக்கு நல்லது. கூடுதலாக வாசனையையும் கொடுக்கிறது)
செய்முறை
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து வடிகட்டி தேவைப்பட்டால் சிட்டிகையளவு சுக்குப்பொடி சேர்த்து பருகலாம்.
இது கிட்டத்தட்ட பானகம் போன்றது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலில் உள்ள எண்ணற்ற நோய்களை அகற்றம்.
மிதமான சூட்டில் இரவு உறங்கச்செல்லும் முன் இதை பருகிவிட்டுச் சென்று படுக்கவேண்டும்.
காலையில் எழுந்திருக்கும்போது, மூளை, நரம்பு, உடல் அனைத்தையும் சரிசெய்யும். மலச்சிக்கல் பிரச்னையை போக்கும். குடல் புழுக்களை வெளியேற்றும்.
இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்தசோகையை குணப்படுத்தும். உடலில் புது ரத்தத்தை ஊறச்செய்யும். உடலில் உள்ள நச்சுக்களையும், ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் கரைத்து வெளியேற்றும்.
உடலை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும். அஜீரணக் கோளாறு மற்றும் செரிமானக் கோளாறை நீக்கும்.
வாயுத்தொல்லையை போக்கும். வயிறு உப்புசத்தை குணப்படுத்தும். உடலில் உள்ள வலியை போக்கும். இதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள் இதில் இரண்டு துளசியையும் சேர்த்து ஊறவைத்து சாப்பிடவேண்டும். வெல்லத்தை அளவைக் குறைத்து வாரத்தில் இருமுறை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெல்லத்தில் உள்ள ஆன்டிமைக்ரோபைல் தன்மை சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. சருமத்தில் உள்ள மாசுக்களைப்போக்கும். உடலில் உள்ள நச்சுக்களை விரட்டியடிக்கும்.
தூக்கமின்மை பிரச்னைகளால் அவதியுறுபவர்கள் தண்ணீருக்கு பதில், இதை பாலில் கலந்து சாப்பிடலாம். இதனால் நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். வாத நோய்களை குணப்படுத்தும். பித்தத்தை போக்கும்.
அனீமியாவை சரிசெய்யும். மாதவிடாய் கால உடல் சோர்வுகளில் இருந்து பெண்களை காக்கும். செரிமான திரவங்களை தூண்டும். நார்ச்சத்து உடல் உள் உறுப்புக்களை சுத்தம் செய்யும். இதை தினமும் பருகலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்