தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Banana Flower Sambar : ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூவில் சாம்பார் செய்யலாம்! இதோ ரெசிபி!

Banana Flower Sambar : ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூவில் சாம்பார் செய்யலாம்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Oct 07, 2023 11:41 AM IST

ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூவில் சாம்பார் செய்வது எப்படி?

Banana Flower Sambar : ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூவில் சாம்பார் செய்யலாம்! இதோ ரெசிபி!
Banana Flower Sambar : ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூவில் சாம்பார் செய்யலாம்! இதோ ரெசிபி!

ட்ரெண்டிங் செய்திகள்

துவரம் பருப்பு . 1 கப்

புளிக்கரைசல் – அரை கப்

மஞ்சள் துள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய் – 1 கப் (துருவியது)

வர கொத்தமல்லி – 3 ஸ்பூன்

கடலை பருப்பு – 1 ஸ்பூன்

வர மிளகாய் – 2

வெந்தயம் – கால் ஸ்பூன்

மிளகு – கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – 1 கொத்து

எண்ணெய் – 2 ஸ்பூன்

தாளிக்க

கடுகு – 1 ஸ்பூன்

எண்ணெய் – 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடாக்கி, வெந்தயம், வர மிளகாய், மிளகு, கடலை பருப்பு ஆகிய பொருட்களை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதை வறுத்து முடிந்தவுடன், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கி, ஆறியபின் அரைத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கிடையில் பருப்பு மற்றும் வாழைப்பூ இரண்டையும் தனித்தனியாக மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், வாழைப்பூ, உப்பு என அனைத்தும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வேகவைக்கவேண்டும்.

இப்போது மசாலா, துவரம் பருப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்த சாம்பாரில் சேர்க்க வேண்டும்.

புளி தேவையென்றால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். புளி சேர்க்காமலும் இந்த வாழைப்பூ சாம்பார் நன்றாக இருக்கும்.

வாழைப்பூவுக்கு பதில், சிவப்பு பரங்கிக்காய், வெள்ளை பரங்கிக்காய், முருங்கைக்காய், குடை மிளகாய் சேர்த்தும் செய்யலாம். தனித்தனி சாம்பாராக செய்வது.

இதுபோன்ற மசாலா கலவையில் செய்து பாருங்கள். சுவை நன்றாக இருக்கும். பொதுவாக வாழைப்பூவில் உசிலி, வடை, கூட்டு, பொரியல் என்றுதான் செய்வார்கள். இந்த சாம்பார் கொஞ்சம் வித்யாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.

இந்த வாழைப்பூ சாம்பாரை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

WhatsApp channel