தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ரம்யாவிடம் சிக்கிய கார்த்திக்.. மருத்துவமனை வர மறுக்கும் ஐஸ்வர்யா.. சந்தேகத்தில் மீனாட்சி!

Karthigai Deepam: ரம்யாவிடம் சிக்கிய கார்த்திக்.. மருத்துவமனை வர மறுக்கும் ஐஸ்வர்யா.. சந்தேகத்தில் மீனாட்சி!

Kalyani Pandiyan S HT Tamil
May 06, 2024 02:17 PM IST

Karthigai Deepam மோதலுடன் தொடங்கிய சந்திப்பு.. கார்த்திக் விஷயத்தில் ரம்யா எடுத்த முடிவு!- கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்தியின் முதல் சந்திப்பு ரம்யாவுடன் மோதலில் தொடங்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

தீபா, ஐஸ்வர்யாவிடம் வாங்கக்கா ஹாஸ்பிடலுக்கு செக்கப் போயிட்டு வரலாம் என்று சொல்லி கூப்பிட, அவள் என் குழந்தையை எனக்கு பாத்துக்க தெரியும்; செக்கப் எல்லாம் ஒன்னும் தேவை இல்ல. நான் நல்லா, ஆரோக்கியமாதான் இருக்கேன் என்று சொல்லி விடுகிறாள். 

இந்த விஷயத்தை தீபா, மீனாட்சி மற்றும் மைதிலியிடம் சொல்ல, அவர்களுக்கு ஐஸ்வர்யா மீது ஏதோ ஒரு சின்ன சந்தேகம் வரு‌கிறது. மறுபக்கம், ஆபீசுக்கு ரம்யா கோபமாக வர, கார்த்திக் அதே ஆபீசுக்கு இன்டர்வியூக்கு வருகிறான். இதை அறிந்து ரம்யா பயங்கர கடுப்பாகிறாள்.  

என்னைத் தேடி தேடி வந்து பிரச்சினை செய்கிறாயா என்று கேட்க, ஆனந்த் அனுப்பினதாக கார்த்திக் சொல்கிறான். உடனே அவள், சரி, உனக்கு வேலை போட்டுத் தரேன். ஆனால் இங்கே வேலை செய்வதற்கு சில கண்டிஷன்கள் இருக்கிறது என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், சம்பளம் உள்ளிட்ட விபரங்களையும் எடுத்துச் சொன்னாள். 

பிறகு மேனேஜரை கூப்பிட்டு, இவர வேலைக்கு எடுத்துக்க என்று சொல்ல, அவர் மாணிக்கத்துக்கு அசிஸ்டென்டா இரு, அவர்கிட்ட வேலையை கத்துக்க என்று சொல்கிறார். கலகலப்பான மனிதரான மாணிக்கம், நான் உனக்கு வேலை கத்து கொடுத்து பெரிய ஆளாக்குவேன் என்று அழைத்துச் செல்கிறார்.

பிறகு, அபிராமி தீபாவை கூப்பிட்டு, எல்லாருக்கும் உன்னுடைய பாட்டை கேக்கணும்னு ஆசையா இருக்கு; பாடு என்று சொல்ல, தீபா இதுக்காக தான் இவ்வளவு நாள் போராடிக்கிட்டு இருந்தேன் என்று பாடல் ஒன்றைப் பாடினாள். 

அனைவரும் அதைக் கேட்டு ரசிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

ஆனந்த், ரம்யா ஒரு லேடி ஹிட்லர். கார்த்தியை அவ கம்பெனிக்கு அனுப்பினா, கண்டிப்பா அவன் கஷ்டப்படுவான் என்று சொன்னான். 

தொடர்ந்து, ரம்யாவுக்கு போன் போட்டு, எனக்கு தெரிஞ்ச ஒருத்தனை அனுப்பி வைக்கிறேன். அவனுக்கு உன் கம்பெனில வேலை போட்டு கொடு என்று சொன்னான். 

உடனே ரம்யா, நீயே கம்பெனி வைத்திருக்கிறாய்.. பின்னர் ஏன் என் கம்பெனியில் வேலை கேட்கிறாய் என்று கேட்க, அதற்கு ஆனந்த், இப்போதைக்கு இந்த ஆள் தேவைப்படல அதனால்தான் அங்கு அனுப்புகிறேன் என்று கூறினான். 

அத்தோடு, அவன் தப்பு பண்ணா நான் ரெகமெண்ட் பண்ண ஆளு என்றெல்லாம் பார்க்க வேண்டாம், வேலையை விட்டு அனுப்பிடு என்று சொல்லி, ஃபோனை வைத்தான். 

மார்க்கெட் சென்று வந்த தீபா, முருங்கைக்காய் முருங்கைப்பூ என அனைத்தும் முருங்கை ஐட்டமாக வாங்கி வர, மீனாட்சியும் மைதிலியும் அவளை கலாய்த்து தள்ளினர். 

இதற்கிடையே, அபிராமி என்ன சமையல் என்று கேட்க, தீபா முருக்கை ஐட்டமாக வாங்கி வந்து இருக்கிறாள் என்று சொன்னாள். அதற்கு அபிராமி, உடம்புக்கு நல்லது தானே; கல்யாணமான புதுசுல நானும் இப்படி தான் சமைச்சு கொடுத்தேன் என்று சொல்ல, அபிராமியையும் சேர்த்து கலாய்த்தனர். 

அதன் பிறகு, ஆனந்த் கார்த்திக்கை கூப்பிட்டு, நீ நம்ப ஆபீஸ்க்கு வர வேண்டாம், வேற ஒரு ஆபீஸோட அட்ரஸ் கொடுக்கிறேன், அங்க போ என்று சொன்னதுதான் மிச்சம், காட்டமான கார்த்தி உங்களுக்கு என்னைய இடம் மாத்திக்கிட்டே இருக்கிறதே வேலையை போச்சு என்று சொல்லி, சரி குடுங்க என்று ரம்யா கம்பெனிக்கு கிளம்பிச் சென்றான். 

மறுபக்கம் தண்ணீர் பிடித்த ஒரு பெண் தவறுதலாக வந்து ரம்யா மீது மோதிவிட, அந்த ரம்யா அந்தப் பெண்ணிடம் சண்டை போட்டாள். 

ஆனால், அந்தப் பெண்ணோ உங்கமேலதான் தப்பு என்று சொன்னாள்.  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்