தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Nelson About Vijay69: 'தளபதி 69ல் விஜய் சார் கூட.. இவங்க இருந்தா தூளா இருக்கும்': நெல்சன் திலீப்குமார்

Director Nelson About Vijay69: 'தளபதி 69ல் விஜய் சார் கூட.. இவங்க இருந்தா தூளா இருக்கும்': நெல்சன் திலீப்குமார்

Marimuthu M HT Tamil
Apr 26, 2024 05:53 PM IST

Director Nelson Dilip Kumar About Vijay69: நடிகர் விஜயின் அடுத்த படத்தை தான் இயக்கினால் யாரெல்லாம் நடிப்பார்கள் என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

 விஜய் உடன் இயக்குனர் நெல்சன்.
விஜய் உடன் இயக்குனர் நெல்சன்.

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்கு தீனிபோடும் விதமாக, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார், விஜய். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு விட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப் போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தனது அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். அதே நேரத்தில் 2026 சட்டமன்றத்தேர்தலில் விஜய் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் தெரிவித்திருந்தார். இதன் மூலம் விஜய்யின் குறிக்கோள் 2026 சட்டப்பேரவைத்தேர்தல் என்பது தெளிவாகிறது.

அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் என்னும் உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகிறது. மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , தமிழக வெற்றிக் கழகம் என்னும் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.

தொடங்கிய மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

சமீப காலமாக, அதனைத் தொடர்ந்து, மார்ச் 11ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகம், மத்திய அரசு நிறைவேற்றிய சி.ஏ.ஏ. என்னும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஏற்புடையது அல்ல என முதல் கண்டன அறிக்கையைப் பதிவுசெய்தது. ஆனால், அதில் மத்திய அரசு என்னும் வார்த்தையினைப் பதிவு செய்யவில்லை.

இது ஒரு புறமிருக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார்.

தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சென்னை மட்டுமல்லாது, தாய்லாந்து, ஹைதராபாத், இலங்கை, புதுச்சேரி, திருவனந்தபுரம், ரஷ்யா ஆகிய இடங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் விஜய், இந்த திரைப்படத்தில், இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாகவும் தெரிகிறது. முன்பே, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல்,பிகில், லியோ ஆகியப் படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக இசையமைத்து, விசில் போடு என முதல் சிங்கிள் ரிலீஸாகியுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார், நடிகர் விஜயின் 69ஆவது படத்தை எடுத்தால், அப்படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, மெகா ஸ்டார் மம்மூட்டி, பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஆகியோர் நடிப்பார்கள் என ஜெ.எஃப்.டபுள்யூ விழா மேடையில் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் ட்ரெண்டிங்காக சென்று வருகிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்