தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidamuyarchi: Ajith Sir.. உங்கள் வருகையும்.. எங்கள் கொண்டாட்டமும்.. கோவையை கலக்கும் போஸ்டர்!

Vidamuyarchi: AJITH SIR.. உங்கள் வருகையும்.. எங்கள் கொண்டாட்டமும்.. கோவையை கலக்கும் போஸ்டர்!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 07, 2023 10:48 AM IST

“AJITH SIR.... உங்கள் வருகையும் சரி... எங்கள் கொண்டாட்டமும் சரி... சற்று தள்ளி போகலாம் ஆனால் ஒரு போதும் குறையாது... விடாமுயற்சி வருக வெல்க...”

விடாமுயற்சி போஸ்டர்
விடாமுயற்சி போஸ்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

துணிவு திரைப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள் விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது. இந்த நிலையில்தான் அஜித் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் 62 -ல் கமிட் செய்யப்பட்டார். இந்த படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைத்தனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் எடுக்கப்பட்டு வரும் விடாமுயற்சி திரைப்படம் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு பிறகு அண்மையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இப்படத்தில் அஜித்துடன் நடிகை திரிஷா உட்பட முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக அஜித் ரசிகர்கள் இந்த இப்படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர். இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு தற்போது படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கோவையில் நடிகர் அஜித்தின் ரசிகரான ரெட். கே.பிரித்தன் என்பவரின் RKP அஜித்குமார் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் கோவை மாநகரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள்து. அதில் "AJITH SIR.... உங்கள் வருகையும் சரி... எங்கள் கொண்டாட்டமும் சரி... சற்று தள்ளி போகலாம் ஆனால் ஒரு போதும் குறையாது... விடாமுயற்சி வருக வெல்க..." என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டர்  கோவை ரயில் நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. இது அந்த வழியாக செல்வோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்