வேண்டாம் என ரிஜெக்ட் செய்தார்கள்..அதையே காப்பி அடித்து எடுத்துவிட்டார்கள்! கதை திருட்டு சர்ச்சையில் சொர்க்கவாசல்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வேண்டாம் என ரிஜெக்ட் செய்தார்கள்..அதையே காப்பி அடித்து எடுத்துவிட்டார்கள்! கதை திருட்டு சர்ச்சையில் சொர்க்கவாசல்?

வேண்டாம் என ரிஜெக்ட் செய்தார்கள்..அதையே காப்பி அடித்து எடுத்துவிட்டார்கள்! கதை திருட்டு சர்ச்சையில் சொர்க்கவாசல்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 28, 2024 05:31 PM IST

வேண்டாம் என ரிஜெக்ட் செய்து விட்டு தனது கதையை காப்பி அடித்து சொர்க்கவாசல் படத்தை உருவாக்கியிருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மீது இயக்குநர் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாளில் இந்த குற்றச்சாட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வேண்டாம் என ரிஜெக்ட் செய்தார்கள்..அதையே காப்பி அடித்து எடுத்துவிட்டார்கள்! கதை திருட்டு சர்ச்சையில் சொர்க்கவாசல்?
வேண்டாம் என ரிஜெக்ட் செய்தார்கள்..அதையே காப்பி அடித்து எடுத்துவிட்டார்கள்! கதை திருட்டு சர்ச்சையில் சொர்க்கவாசல்?

சிறைக்குள் இருக்கும் பல கேங்குகளுக்கும், சிறை காவல்களுக்கு இடையிலான மோதலையும், சிறைவாசியாக இருக்கும் ஆர்.ஜே. பாலாஜி அதில் சிக்கிக்கொண்டு எப்படி மீள்கிறார் என்ற கதையம்சத்தில் படம் இருப்பதாக ட்ரெய்லரை பார்க்கையில் தெரிகிறது.

செல்வராகவன் பாராட்டு

சொர்க்கவாசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் செல்வராகவன், படத்தின் இயக்குநரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது போன்ற கதை தான் எழுதி உருவாக்க வில்லை என பொறாமையாக இருந்த்தாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் படத்துக்கு நாளுக்கு நாள் ஹைப் எகிறி கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் சொர்க்கவாசல் படத்தின் கதை, தன்னுடையது என்று இயக்குநர் ஒருவர், அதை காப்பியடித்து சில மாற்றங்கள் செய்து படத்தை உருவாக்கியிருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கிருஷ்ணகுமார் என்பவர்,சொர்க்கவாசல் கதை திருட்டு குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சொர்க்கவாசல் கதைச்சர்ச்சை

சைதாப்பேட்டை கிளை சிறையில் பல கைதிகளிடம் இருந்து தான் பெற்ற கருத்துக்களை கொண்டு "கிளைச்சிறை" என்னும் தலைப்பில் ஒரு கதையாகத் தான் எழுதினேன். இதை பவுண்ட் செய்த முழு ஸ்கிரிப்டாக பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்திடம் கொடுத்தேன்.

சில நாள்கள் கழித்து இந்த படத்தின் கதை தங்களுக்கு உகந்ததாக இல்லை என்று மெயில் மூலம் ரிப்ளை அனுப்பினர் என்று கூறியுள்ளார். அத்துடன் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு, இப்போது செர்க்கவாசல் படத்தை தயாரித்திருக்கும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் மற்றும் நடிகர், இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி மீது குற்றம் சாட்ட்டை முன் வைத்துள்ளார்.

காபி அடித்ததை ஓபனாக சொன்ன ஆர்.ஜே. பாலாஜி

முன்னதாக, தான் இயக்குநராக அறிமுகமான மூக்குத்தி அம்மன் படம், பிரபலமான இந்தி படத்தின் காபி தான். அதில் சில மாற்றங்களை செய்து தான் உருவாக்கினேன் என்று ஓபனாக பேசி இருந்தார். சொர்க்க வாசல் படம் குறித்த சர்ச்சை எழுத்திருக்கும் நிலையில், ஆர்.ஜே. பாலாஜி பழைய விடியோவை இணையவாசிகள் தற்போது பகிர்ந்து அவர் ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளார்கள்.

சொர்க்கவாசல் படம்

சித்தார்த் விஸ்வநாத் என்ற புதிய இயக்குநர் இயக்கியிருக்கும் சொர்க்க வாசல் க்ரைம் ட்ராமா பாணியில் உருவாகியுள்ளது. படத்தில் ஆர். ஜே. பாலாஜி, சானியா ஐயப்பன், செல்வராகவன், யோகி பாபு, நட்ராஜ் சுப்பிரமணியம், கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்துக்கு சித்தார்த் விஸ்வநாத், தமிழ் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து திரைக்கதை உருவாக்கியுள்ளனர். படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். சென்னை மத்திய சிறையில் 1999 காலகட்டத்தில் நடக்கும் கதையாக சொர்க்கவாசல் படம் உருவாகியிருப்பதாக தெரிகிறது. சிறை தொடர்பான காட்சிகளை கர்நாடகா மாநிலத்தில் வைத்து ஷூட் செய்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆன்லைன் ஸ்டீரிமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.