வசூலை அள்ளிக்குவித்த மகாராஜா! இயக்குநருக்கு சொகுசு கார் அளித்த படக்குழு!
இந்த ஆண்டின் ஜூன் மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சிறப்பாக சென்ற படம் தான் மகாராஜா. மகாராஜா படத்தின் ஹீரோவாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். இப்படம் இவருக்கு 50 ஆவது படமாக வெளியானது.

தமிழ் திரையுலகில் இந்த 2024 ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டு தான் என்று கூற வேண்டும். ஆண்டின் தொடக்கத்தில் நல்ல படங்கள் எதுவும் வர வில்லை. அதனால் தமிழ் ரசிகர்கள் மலையாள, தெலுங்கு படங்களை புகழ்ந்து கொண்டு இருந்தனர். ஆண்டின் நடுப்பகுதியிலேயே மிகவும் வித்தியாசமான கதைக் களத்துடன் படங்கள் வெளியாகி தமிழ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதனைத்த தொடர்ந்து மாத இறுதியான தற்போதும் பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த ஆண்டின் ஜூன் மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சிறப்பாக சென்ற படம் தான் மகாராஜா.
மகாராஜா படத்தின் ஹீரோவாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். இப்படம் இவருக்கு 50 ஆவது படமாக வெளியானது. பொதுவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் 50 ஆவது படம் அவ்வளவு நன்றாக ஓடியதில்லை. அந்த வழக்கத்தை விஜய்சேதுபதியின் மகாராஜா மாற்றி உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷியாப், அபிராமி, திவ்யபாரதி, மம்தா மோகன்தாஸ், சச்சனா ஆகியோர் நடித்து இருந்தனர்.
அதிக வசூல்
மகாராஜா படம் வெளியானதில் இருந்து அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லாகவே இருந்தது. அதனைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கு, ஹிந்தி, மலையளாம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன. மற்ற மாநிலங்களிலும் இப்படம் வசூலை குவித்தது. மேலும் இப்படம் ஜூலை மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பல மாதங்களாக டாப் படங்கள் வரிசையில் இருந்து வருகிறது. படத்தின் கதையும், அதை சொல்வதற்கு இயக்குநர் நித்திலன் சாமிநாதன் கையாண்ட உக்தியும் பாராட்டும் விதமாக இருந்தன.