தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Nadu Government Film Awards: சிறந்த நடிகர் மாதவன்..தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

Tamil Nadu Government Film Awards: சிறந்த நடிகர் மாதவன்..தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

Aarthi Balaji HT Tamil
Mar 05, 2024 06:47 AM IST

2015 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நடிகர் மாதவன்
நடிகர் மாதவன்

ட்ரெண்டிங் செய்திகள்

மார்ச் 6 ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழா தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமயில் நடக்க உள்ளது.

இவர் விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்குச் காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவார்.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்கள், நடிகர் நடிகைகள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் பற்றி கீழே பார்க்கலாம்..

சிறந்த படம் முதல் பரிசு: தனி ஒருவன்

சிறந்த படம் இரண்டாம் பரிசு: பசங்க 2

சிறந்த படம் மூன்றாம் பரிசு: பிரபா

சிறந்த படம் சிறப்புப் பரிசு: இறுதிச்சுற்று

பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு): 36 வயதினிலே

சிறந்த நடிகர்: ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று)

சிறந்த நடிகை: ஜோதிகா (36 வயதினிலே)

சிறந்த நடிகர் சிறப்பு பரிசு: கௌதம் கார்த்திக் (வை ராஜா வை)

சிறந்த நடிகை சிறப்பு பரிசு: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)

சிறந்த வில்லன் நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்)

சிறந்த நகைச்சுவை நடிகர்: சிங்கம் புலி (அஞ்சுக்கு ஒண்ணு)

சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம்/ 36 வயதினிலே)

சிறந்த குணச்சித்திர நடிகர்: தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்)

சிறந்த குணச்சித்திர நடிகை: கவுதமி (பாபநாசம்)

சிறந்த இயக்குநர்: சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)

சிறந்த கதையாசிரியர்: மோகன் ராஜா (தனி ஒருவன்)

சிறந்த உரையாடலாசிரியர்: இரா.சரவணன் (கத்துக்குட்டி)

சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்)

சிறந்தப் பாடலாசிரியர்: விவேக் (36 வயதினிலே),

சிறந்த பின்னணிப் பாடகர்: கானா பாலா (வை ராஜா வை)

சிறந்த பின்னணிப் பாடகி: கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே)

சிறந்த ஒளிப்பதிவாளர்: ராம்ஜி (தனி ஒருவன்)

சிறந்த ஒலிப்பதிவாளர்:  ஏ.எல்.துக்காராம் ,  ஜெ.மஹேச்வரன் (தாக்க தாக்க)

சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்): கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)

சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்): பிரபாகரன் (பசங்க 2)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர்: ரமேஷ் (உத்தம வில்லன்)

சிறந்த நடன ஆசிரியர்: பிருந்தா (தனி ஒருவன்)

சிறந்த ஒப்பனைக் கலைஞர்: சபரி கிரீஷன் (36 வயதினிலே/ இறுதிச்சுற்று)

சிறந்த தையற் கலைஞர்: வாசுகி பாஸ்கர் (மாயா)

சிறந்த குழந்தை நட்சத்திரம்: மாஸ்டர் நிஷேஸ், பேபி வைஷ்ணவி (பசங்க 2)

சிறந்த பின்னணிக்குரல்: (ஆண்) கௌதம் குமார் (36 வயதினிலே)

சிறந்த பின்னணிக்குரல்: (பெண்) ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்