தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Udhayanidhi Stalin:இன்பநிதியின் அந்தரங்க புகைப்பட சர்ச்சை -வாய் திறந்த உதயநிதி!

Udhayanidhi Stalin:இன்பநிதியின் அந்தரங்க புகைப்பட சர்ச்சை -வாய் திறந்த உதயநிதி!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 11, 2023 12:34 PM IST

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதியின் மகன் இன்பநிதி தனது தோழியுடன் இருப்பது போன்ற பர்சனல் புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி வைரலானது அது குறித்து உதயநிதி தன்னுடைய விளக்கத்தை அளித்திருக்கிறார்

உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!
உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இன்பநிதி
இன்பநிதி

இதனையடுத்து, எதிர்கட்சிகள் உட்பட பலரும் திமுகவையும், உதயநிதியையும் சாடி கருத்துக்களை பதிவிட்டனர். கருத்துக்களும், கண்டனங்களும் பெருக இன்பநிதியின் அம்மாவும், இயக்குநருமான கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், “நேசிக்கவும், அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம். இயற்கையை அதன் முழு மேன்மையுடன் புரிந்துகொள்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்று” என்று பதிவிட்டார்.

இந்த பதிவு சமூகவலைதளங்களில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அண்மையில் கண்ணை நம்பாதே படம் தொடர்பாக கொடுத்த நேர்காணலில் உதயநிதி பேசி இருக்கிறார். அவர் பேசும் போது, “ அவருக்கு 18 வயது ஆகி விட்டது. அவன் இப்போது இளைஞர். அது அவருடைய பர்சனல் வாழ்கை.

அது எனக்கும், கிருத்திகா மற்றும் என்னுடைய மகன் சம்பந்தப்பட்ட விஷயம். அதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. இந்த மாதிர்யான குடும்பத்தில் இருப்பதால் சில குற்றசாட்டுகள் வரத்தான் செய்யும். அதற்கான புரிதல் இன்பநிதிக்கு இருக்கும் பட்சத்தில், அதை அவர் பார்த்துக்கொள்ளட்டும். 

அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. அந்த விஷயத்தில் என்னுடைய எல்லைக்கு அதிகமாக நானே அதில் தலையிட விரும்பவில்லை. அது அவருக்கான சுதந்திரம்” என்று பேசினார்.

உதயநிதி - கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு இன்பநிதி, தன்மயா ஆகிய 2 குழந்தைகள் உள்ளார்கள். 

உதயநிதி ஸ்டாலினும் கிருத்திகா உதயநிதியும் தங்கள் காதல் பற்றி பல்வேறு பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்கள். திரைத்துறையில் அதிக ஆர்வம் கொண்ட கிருத்திகா, மிர்ச்சி சிவா நடித்திருந்த ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தை இயக்கிய அவரது இயக்கத்தில் கடைசியாக பேப்பர் ராக்கெட் திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்