தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Elephant Whisperers: ரகு யானையை பார்க்க குவியும் சுற்றுலாப் பயணிகள்

The Elephant Whisperers: ரகு யானையை பார்க்க குவியும் சுற்றுலாப் பயணிகள்

Aarthi V HT Tamil
Mar 14, 2023 10:52 AM IST

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் புகழ்பெற்ற ரகு யானையை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ரகு யானை
ரகு யானை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் பலரும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் குவிந்தனர். அனைவரும் சென்று ஆஸ்கர் வென்று கொடுத்த ரகு யானையை பாசமாக பார்த்து வருகின்றனர்.

இது குறித்து சுற்றுலாப் பயணியான கிரேஸ் கூறுகையில், "நான் லண்டனில் இருந்து வருகிறேன், நாங்கள் இங்கு சென்று பார்த்தோம், நேற்றிரவு இங்கிருந்து இரண்டு குட்டி யானைகள் ஆஸ்கார் விருது பெற்றதை அறிந்தோம். அவற்றைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது, அவற்றைப் பார்த்து நான் மிகவும் ரசித்தேன். யானைகள் எனக்கு மிகவும் பிடித்த விலங்கு. நான் இன்று அவர்களைப் பார்ப்பதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி." என்றார்.

ஒரு ஜோடி, அனாதையான குட்டி யானை ரகுவை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார்கள் என்பதைச் சுற்றியே குறுப்படம் வருகிறது. முதுமலையில் அமைந்த ஆவணப்படம் பழங்குடியினர் இயற்கையோடு இயைந்து வாழும் முறையையும் தொட்டுச் செல்கிறது.

இந்த பிரிவின் கீழ் விருதை வென்ற இந்தியாவின் முதல் ஆவணப்படம் இதுவாகும். படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இந்த ஆவணப்படத்தை எடுக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் 5 ஆண்டுகள் தங்கியிருந்தார்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் ஆசியாவிலேயே மிகவும் பழமையான யானைகள் முகாம் ஆகும். இந்த முகாம் 105 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த முகாமில் 28 யானைகள் உள்ளன மற்றும் இது மோயார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

ஆஸ்கர் வென்ற பிறகு மக்கள் அனைவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஆவணப்படத்தை இப்போது தான் சென்று ஆர்வமாக பார்க்கிறார்கள். பொம்மன், பெள்ளி தம்பதிக்கும் ரகு யானைக்கும் இடையே உள்ள பிணைப்பை உணர்வுப்பூர்வமாக காண்பித்த இவர்களுக்கு ஆஸ்கர் கிடைத்தது பாராட்ட வேண்டிய விஷயம் என நெட்டிசன்கள் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்