தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Arputhan: உணர்வுப்பூர்வமான காதல் படங்களை இயக்கி பெயரெடுத்த இயக்குநர் அற்புதன் மறைவு

Director Arputhan: உணர்வுப்பூர்வமான காதல் படங்களை இயக்கி பெயரெடுத்த இயக்குநர் அற்புதன் மறைவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 08, 2023 02:38 PM IST

தமிழ் சினிமாவில் காதல் படங்களில் தனித்துவ மேக்கிங்கால் முத்திரை பதித்த இயக்குநராக இருந்தவர் அற்புதன். இவர்தான் ராகவா லாரன்ஸை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

தமிழ் சினிமா இயக்குநர் அற்புதன் மறைவு
தமிழ் சினிமா இயக்குநர் அற்புதன் மறைவு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படத்துக்கு முன்னர் டான் மாஸ்டராக இருந்த வந்த ராகவா லாரன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், பார்த்தாலே பரவசம் ஆகிய படங்களில் முக்கியத்துவம் மிக்க கதாபாத்திரங்களில் நடித்தார். இதன்பின்னர் அவரை அற்புதன் தான் கதையான நாயகனாக முதன்முதலில் நடிக்க வைத்தார்.

இதையடுத்து 52 வயதாகும் இயக்குநர் அற்புதன் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சையில் இருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் உயிரிழந்தார். இவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அற்புதன் இயக்கத்தில் காதல் திரைப்படமாக 2002இல் வெளியான அற்புதம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்ற இந்த படம் ஓரளவு லாபத்தையும் ஈட்டியது. படத்தில் இடம்பெறும் மலரா மலரா என்ற மெலடி பாடல் இன்றளவும் கேட்கப்படும் சிறந்த மெலடி பாடலாக உள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து ஷாம் நடித்த மனதோடு மழைக்காலம் என்ற மற்றொரு காதல் படத்தை இயக்கினார். தொடர்ந்து தெலுங்கிலும் உதய் கிரண் நடித்த லவ் டுடே என்ற படத்தை இயக்கினார்.

இயக்குநர் அற்புதன் சினிமாவில் தன்னை ஒரு காதல் பட இயக்குநராகவே அடையாளப்படுத்திக்கொண்டார். இவரது படங்கள் உணர்வுபூர்வமான காதலை சொல்லும் விதமாகவே அமைந்திருந்தன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்