தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamannaah: தலைசுற்ற வைக்கும் தமன்னாவின் சொத்து மதிப்பு!

Tamannaah: தலைசுற்ற வைக்கும் தமன்னாவின் சொத்து மதிப்பு!

Aarthi V HT Tamil
Dec 24, 2023 12:10 PM IST

நடிகை தமன்னா, சொத்து மதிப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமன்னா
தமன்னா (Instagram)

ட்ரெண்டிங் செய்திகள்

2010 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட் மூலம் சினிமாவில் நுழைந்தாலும் , தமிழ் சினிமா அவருக்கு சரியான வாய்ப்புகளை வழங்கியது. 

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் மட்டுமல்ல, தெலுங்கிலும் தமன்னாவின் நடிப்பு அதிரடியாக இருந்தது. இதனால் தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் தமன்னா , தற்போது பான் இந்தியன் ஹீரோயினாக கலக்கி வருகிறார். 

இந்நிலையில் தமன்னா தற்போது இந்தி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். 

பாகுபலி படத்தில் பிரபாஸுடன் மேலாடையின்றி நடித்த தமன்னா கடந்த சில வருடங்களாக கிளாமராக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட லஸ்ட் ஸ்டோரிஸ் பாகம் 2 என ரசிகர்களை மகிழ்விக்க வைத்துள்ளார். அதேபோல் ஜெயிலர் படத்தில் இவர் ஆடிய ஐட்டம் டான்ஸ் அனைவரையும் ரசிக்க வைத்தது. 

இந்நிலையில் தமன்னா சமீபத்தில் பாலிவுட் ஹீரோ விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். விரைவில் அவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 17 வருடங்களாக திரையுலகில் இருக்கும் தமன்னா ஒரு படத்திற்கு சுமார் 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நடனத்திற்காக சுமார் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான தமன்னா நெட் வொர்த் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, 15 வயதில் சினிமாவில் அறிமுகமான தமன்னா , தற்போது 120 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர். அதுமட்டுமல்லாமல் மும்பையில் 20 கோடி மதிப்பிலான வீடும் , ஹைதராபாத் மற்றும் சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஃப்ளாட்டும் வாங்கியுள்ளார் . மேலும், அவர் bmw 320i, mercedes-benz போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.

GLE, மற்றும் Mitsubishi Pajero. அந்த வகையில் இவற்றின் மொத்த மதிப்பு 2.5 கோடி ரூபாய் எனத் தெரிகிறது. முக்கியமாக தமன்னா 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தை வாங்கினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்