தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivkarthikeyan: முதல் முறையாக இணையும் சிவகார்த்திகேயன் - வடிவேலு காம்போ? முழு விவரம் இதோ

Sivkarthikeyan: முதல் முறையாக இணையும் சிவகார்த்திகேயன் - வடிவேலு காம்போ? முழு விவரம் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 08, 2023 07:54 PM IST

அயலான் கதபாத்திரத்துக்கு குரல் கொடுக்க வடிவேல் மட்டும் சம்மதம் தெரிவித்தால் முதல் முறையாக சிவகார்த்திகேயன் - வடிவேல் காம்போ ரசிகர்களை மகிழ்விக்கலாம்.

அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுடம் இணையும் வடிவேலு?
அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுடம் இணையும் வடிவேலு?

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையே சிவாகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கும் அயலான் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வரும் இந்தப் படத்தின் டீஸர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் அயலான் படத்தில், தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஏலியன் கதாபாத்திரம் படம் முழுவதிலும் இடம்பெறும் விதமாக திரைக்கதை அமைத்துள்ளனர். இதனால் படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

இதையடுத்து படத்தில் இடம்பிடித்திருக்கும் முக்கிய கதாபாத்திரமான ஏலியன் கேரக்டருக்கு வடிவேலு குரல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என கருதி படக்குழுவினர் அவரை அனுகியுள்ளனராம். ஆனால் இதற்கு வடிவேலு தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை என கூறப்படுகிறது.

வடிவேலு மட்டும் சம்மதம் தெரிவத்தால், சிவகார்த்திகேயன், வடிவேலு இணையும் முதல் படமாக இது அமையும் எனவும், இருவரில் காம்போ காமெடியில் தெறிக்கவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வடிவேலு ரசிகர்களையும் படம் வெகுவாக கவரும் எனவும் நம்பலாம்.

அயலான் படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - நிரவ் ஷா. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர், பானுப்பிரயா, ராகுல் மாதவ் உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள். 24 ஏம் ஸ்டுடியோஸ், கேஜிஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் 2024 பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்