தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shivangi: ‘நீனா சமைச்ச’.. மிரண்டு போன நடுவர்கள்! கெத்து காட்டிய சிவாங்கி!வீடியோ!

Shivangi: ‘நீனா சமைச்ச’.. மிரண்டு போன நடுவர்கள்! கெத்து காட்டிய சிவாங்கி!வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 12, 2023 12:32 PM IST

குக் வித் கோமாளியின் 4 ஆவது சீசனில் சிவாங்கி செஃப் ஆஃப் தி வீக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

சிவாங்கி
சிவாங்கி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த முறை கோமாளிகாக ஜி.பி. முத்து, ஓட்டேரி சிவா, மௌன ராகம் ஹீரோயின் ரவீனா, சில்மிஷம் சிவா, மோனிஷா, சிங்கப்பூர் தீபன், குரேஷி, புகழ், மணிமேகலை, கிசுனிதா ஆகியோர் உள்ளனர். குக்குகளாக ஷெரின், ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, நடிகர் ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஜிகர்தண்டா நடிகர் காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரின் நௌரிகட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் நடுவர்களாக இருக்க இந்த சீசனையும் வழக்கம் போல் ரக்‌ஷன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த சீசன் துவங்கி இன்றுடன் மூன்று வாரங்கள் முடிந்திருக்கும் நிலையில், ஒளிப்பரப்பப்பட்ட முதல்வாரம் செலிப்ரேஷன் வாரமாகவும், கடந்த வாரம் இம்மியூனிடீ வாரமாகவும் சென்றது. ஆகையால் இந்த சீசனின் முதல் எலிமினேஷன் சுற்று இன்று நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் சிவாங்கி சமையலில் அசத்தி, நடுவர்களிடம் பாராட்டைப் பெற்றதோடு செஃப் ஆஃப் தி வீக் என்ற பரிசையும் தட்டிச்சென்றார். இறுதியாக எலிமினேஷன் சுற்றில் சுமாராக சமைத்த காளையன், ஷெரின், கிஷோர் ஆகியோர் இருந்த நிலையில், அதிலிருந்து கிஷோர் வெளியேற்றப்பட்டார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்