தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samyuktha: ‘வலி தாங்கல.. ஆபாச வீடியோ காட்டி அடிச்சாரு’ - சம்யுக்தா அதிர்ச்சி பேட்டி

Samyuktha: ‘வலி தாங்கல.. ஆபாச வீடியோ காட்டி அடிச்சாரு’ - சம்யுக்தா அதிர்ச்சி பேட்டி

Aarthi V HT Tamil
Jun 01, 2023 07:46 AM IST

சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இடையேயான குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்யுக்தா
சம்யுக்தா

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாள் கூட நிலைக்கவில்லை. கடந்த சில வாரங்கள் முன்பு இருவரும் பிரிந்தனர். இருவரும் மாறி மாறி குறை கூறி யூ-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது பெற்றோருடன் பேட்டி அளித்த சம்யுக்தா சில அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ”என்னையும், என் பெற்றோரையும் விஷ்ணுகாந்த் எப்போதுமே மரியாதையாக நடத்தியது இல்லை. கால் மேல் கால் போட்டு கொண்டு அவர் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என மிரட்டுவார்.

அவர் ஏன் என்னை கல்யாணம் செய்தது ஒரே விஷயத்திற்காக தான். அவர் என்னை செக்ஸுக்காக மட்டுமே திருமணம் செய்தார். ஒரு மனைவியை எப்படி நடத்த வேண்டும் என அவருக்கு தெரியவில்லை.

24 மணி நேரமும் அதே நினைப்பு தான் அவருக்கு இருக்கும். நான் ஒரு பெண், எனக்கும் உணர்வுகள் இருக்கும் என நினைச்சது கூட இல்லை. நான் அவரின் விருப்பத்தின் பேரில் உறவில் ஒத்துழைக்கவில்லை என்றால் என்னை வேறு விதமாக ட்ரீட் பண்ணுவார். இரண்டு பேரும் புரிந்து, இணைந்து உறவில் இருந்தால் மட்டுமே அது சரியாக இருக்கும். அந்த விஷயத்தில் நான், விஷ்ணுகாந்துக்கு மனிதராக தெரியவில்லை. மிஷினாகவே தெரிந்திருக்கிறேன்.

ஆபாச வீடியோவை பார்த்து இந்த மாதிரி செய்ய வேண்டும் என சொல்லுவார். அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை என்றால் அதற்கு தகுதியில்லாதவர் என சொல்லுவார்.

என்னால் முடியாது என சொன்னால், இந்த ரூம்ல கேமரா வைத்து நாம் இருவரும் இருக்கும் வீடியோவை போட்டு பார்க்கலாம் என சொல்லுவார். இதை எல்லாம் என்ன என்று சொல்வது என்றே தெரியவில்லை. பாலியல் உறவு காரணமாக எனக்கு நோய் தொற்று ஏற்பட்டு விட்டது. அதை கூட விஷ்ணுகாந்த் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. வலி தாங்க முடியாமல் கத்தினால் அதற்கு வாய்யை மூட சொல்லி அடிப்பார்” என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்