தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  S. J. Surya: என்ன ஒரு மனிதர்… : ராகவா லாரன்ஸ் பற்றி எஸ். ஜே. சூர்யா

S. J. Surya: என்ன ஒரு மனிதர்… : ராகவா லாரன்ஸ் பற்றி எஸ். ஜே. சூர்யா

Aarthi V HT Tamil
Jan 17, 2023 12:42 PM IST

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்து வரும் எஸ். ஜே. சூர்யா, ராகவா லாரன்ஸை புகழ்ந்து ட்விட் செய்துள்ளார்.

 ராகவா லாரன்ஸ் பற்றி எஸ். ஜே. சூர்யா
ராகவா லாரன்ஸ் பற்றி எஸ். ஜே. சூர்யா

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரையை கதைகளகமாக கொண்ட ’அசால்ட் சேது’ என்ற கேரக்டரில் தோன்றிய பாபி சிம்ஹாவை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டாம் பகுதியான ஜிகர்தண்டா 2 படம் உருவாகி வருகிறது. இதையும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்த இரண்டாம் பாகத்துக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீஸர் வெளியாகி கவனம் பெற்றது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா மோதிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ள காட்சிகள் டீசரில் இடம் பெற்று இருந்தது.

இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு குறித்து நடிகர் எஸ். ஜே. சூர்யா பதிவு ஒன்றை பகிர்ந்து உள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளார்.

அதில், "36 நாட்கள் ஒரே செடியூலில் ஜிகர்தண்டா -2. இந்த வாய்ப்புக்கு நன்றி கார்த்திக் சுப்பராஜ். என்ன ஒரு அட்டவணை, என்ன ஒரு கருத்து, என்ன ஒரு தொகுப்பு , என்ன ஒரு புகைப்படம், என்ன ஒரு செலவு, என்ன ஒரு தயாரிப்பு மதிப்பு.

ராகவா லாரன்ஸ் அருகில் நான் பார்த்த அற்புத உள்ளம்" என்று பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்