தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rrr For Oscar: ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பாடப்படும் நாட்டு நாட்டு பாடல்

RRR for Oscar: ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பாடப்படும் நாட்டு நாட்டு பாடல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 01, 2023 02:34 PM IST

கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பெர்பார்ம் செய்யப்படவுள்ளது. இந்தப் பாடலை பிரபல பாடகர்கள் ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் பாடவுள்ளனர்.

ஆர்ஆர்ஆர் பாடலில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற நாட்டு நாட்டு பாடலின் காட்சி
ஆர்ஆர்ஆர் பாடலில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற நாட்டு நாட்டு பாடலின் காட்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சந்திரபோஸ் பாடல் வரிகள் எழுத, கீரவாணி இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் அதன் காட்சியமைப்பு, நடிகர்களின் நடனம் என பார்க்கவே சிறந்த விஷுவல் ட்ரீட்டாக இருந்ததோடு, உலகம் முழுவதும் பிரபலமானது. இதையடுத்து தற்போது இந்தப் பாடல் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள புகழ் பெற்ற டால்பி தியேட்டரில் பாடப்படவுள்ளது.

தமிழில் நாட்டு கூத்து, கன்னடத்தில் ஹல்லி நாட்டு, மலையாளத்தில் கரிந்தோல், இந்தியில் நாச்சோ நாச்சோ என்ற வரிகளில் தொடங்கும் இந்தப் பாடல் நாடு முழுவதும் சூப்பர் ஹிட்டானது. உக்ரனை தலைநகர் கீவ் நகரிலுள்ள அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையில் படமாக்கப்பட்டது. இணையத்தில் வைரலான இந்தப் பாடல் 122 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

இந்தப் பாடல் உலக அளவில் புகழ்பெற்ற பல்வேறு விருதுகளை தட்டிச்சென்றுள்ளது. ஆஸ்கருக்கு இணையான விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதையும் நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது. இதைத்தொடர்ந்து 28வது கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகளில் சிறந்த பாடல், சிறந்த வெளிநாட்டு படம் ஆகிய விருதுகளை வென்றது.

தற்போது ஆஸ்கர் விருதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது இந்தப் பாடல்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்