தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rashmika Mandanna Shares Her Workout Video After Long Time And Says More Video To Come

Rashmika Mandanna: "இன்னும் இத மாதிரி நிறையா பார்ப்பீங்க" - படுத்தவாறே ரஷ்மிகா பகிர்ந்த ஃபயர் விடியோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 23, 2024 05:57 PM IST

நாள்தோறும் ஏதாவதொரு செய்தி மூலம் ட்ரெண்டிங்கிலேயே இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா, படுத்தவாறே ஓர்க் அவுட் செய்யும் விடியோவை பகிர்ந்து லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வருகிறார்.

ஒர்அவுட் விடியோவை பகிர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா
ஒர்அவுட் விடியோவை பகிர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது புஷ்பா 2 படப்பிடிப்பில் இருந்து வரும் நிலையில், புதிய ஒர்க்அவுட் விடியோவால் ரசிகர்களிடம் லைக்குகளையும், ஹார்ட எமோஜிகளையும் குவித்து வருகிறார்.

மல்லாக்க படுத்து கால் விரல்களை பார்க்கும் ராஷ்மிகா

இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் விடியோவில் நடிகை ராஷ்மிகா மல்லாக்க படுத்துக்கொண்டு தனது கால் விரல்களை பார்க்கிறார். பார்ப்பதற்கு சிம்பிளாக இருந்தாலும் மிகவும் கடினமான இந்த உடற்பயிற்சியை அவர் அசால்டாக செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பதிவில், "நான் வொர்க்அவுட்டை வீடியோவைப் பகிர்ந்து சிறிது காலம் ஆகிவிட்டது? கிட்டத்தட்ட 4/5 மாதங்கள் ஆகியுள்ளன.

ஆனாலும் நான் எனது உடற்பயிற்சிகளுடன் முழுமையாக ஒத்துப்போக முடிந்தது. இப்போது நான் மீண்டும் உடற்பயிற்சிக்கு திரும்பியுள்ளேன். இனிமேல் இதுபோல் பல விடியோக்களை பார்ப்பீர்கள். இது உங்களுக்கு எதாவது வகையில் ஊக்குவிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அதிகமாக ஓர்க்அவுட் விடியோக்களை பகிர்ந்து இடையில் அதை நிறுத்தியிருந்த ராஷ்மிகா தற்போது மீண்டும் அது தொடர்பான விடியோக்களை பகிர்வதாக தெரிவித்திருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பிஸியான படப்பிடிப்புக்கு மத்தியிலும் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பேனி காப்பத்தில் முக்கியத்துவம் அளித்து வரும் நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா இருந்து வருகிறார்.

வைரலான ராஷ்மிகாவின் புஷ்பா 2 லுக்

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமாக புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய ராஷ்மிகா, தேசிய அளவில் க்ரஷ் ஆனார்.

இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் ஸ்ரீவள்ளி தரிசனத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வரும் நிலையில், அந்த கெட்டப்பில் அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

சிவப்பு நிற புடவை, கழுத்தில் நகைகள் என ராஷ்மிகாவின் புஷ்பா 2, ஸ்ரீவள்ளி லுக் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புஷ்பா தி ரூல் திரைப்படம் ஆக்ஸ்ட் 15 திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

தனுஷுடன் நடிக்கும் ராஷ்மிகா

புஷ்பா தி ரூல் படத்துக்கு பின்னர் தனுஷுடன் இணைந்து குபேரா படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்த படத்தில் தெலுங்கு டாப் ஹீரோ நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு சினிமா இயக்குநர் சேகர் கம்மூலா இயக்கும் இந்த படத்தில் தனுஷ் லுக் வெளியாகி வைரலானது. ராஷ்மிகாவின் கதாபாத்திரம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்