தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rajinikanth Wishes To Rrr Crew For Winning Oscar Award

Rajini Wishes: ஆஸ்கர் வென்ற ஆர்.ஆர்.ஆர் - ரஜினி வாழ்த்து

Aarthi V HT Tamil
Mar 13, 2023 11:51 AM IST

ரஜினிகாந்த் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ரஜினி வாழ்த்து
ரஜினி வாழ்த்து

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் படைத்தது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு இந்திய மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரவேற்பு கிடைத்தன. பலரும் இந்த பாட்டிற்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டனர்.

இந்நிலையில் 95 ஆவது ஆஸ்கர் விருதிற்கு நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதனிடையே இன்று 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று தொடங்கி நடைபெற்றது. இதில் சிறந்த பாடல் பிரிவில் ஆர். ஆர். ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்து உள்ளது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “ஆஸ்கர் விருது வென்றமைக்கு கீரவாணி, ராஜமௌலி மற்றும் கார்திகி கொன்சால்ஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பெருமை மிக்க இந்தியர்களுக்கு எனது வணக்கங்கள்" என்று பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக ஆர். ஆர். ஆர் படக்குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்