தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth : ஜெயிலரை ரிலீஸ் செய்யப்போவது யார்?

RajiniKanth : ஜெயிலரை ரிலீஸ் செய்யப்போவது யார்?

Priyadarshini R HT Tamil
Jun 10, 2023 07:47 AM IST

Super Star RajiniKanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் படத்தை ரிலீஸ் செய்யப்போவது யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஜெயிலர் படக்குழு
ஜெயிலர் படக்குழு

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் கடைசியாக நடித்த படம் அண்ணாத்த. அதனை தொடர்ந்து அவர் ஜெயிலர் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். நெல்சனும் சிறந்த கமர்ஷியல் இயக்குனர்.

இந்தப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அந்தப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்தப்படம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை கேரளாவில் ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர

ரஜினிகாந்த் மாஸ் ஹீரோ என்பதால் அவரது படத்தின் ரிலீஸ் மிகப்பிரமாண்டமாக இருக்கும். அதை ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்