Pathu Thala First Single: பத்து தல பட தரமான அப்டேட் நாளை வருகிறது
நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் முதல் பாடல் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.
நடிகர் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மாநாடு படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ’
கடந்த ஆண்டு இவர், ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்த மஹா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார்.
இந்நிலையில் சிம்பு அடுத்தாக பத்து தல படத்தில் நடித்து வருகிறார். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார்.
இந்த படம் கன்னட படமான மஃப்டியின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படம் கடந்த டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்து இருந்தனர். ஆனால் சில காரணங்களால் படம், மார்ச் மாதம் 30 ஆம் தேதிக்கு ரிலீஸூக்கு தள்ளிப் போனது. இது குறித்த அறிவிப்பு நாளை மாலை 5.04 வெளியாக உள்ளது.
இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாள் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு பத்து தல படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இதனை குறிப்பிடாமல் படக்குழு முதல் பாடல் அறிவிப்பு தேதி நாளை வெளியாகும் என குறி
இது குறித்து படக்குழு வெளியிட்ட பதிவில், ” பத்து தல படத்தின் முதல் சிங்கள் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்