தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: "நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா" - விஜய்க்கு அரசியல் அழைப்பு விடுக்கும் ரசிகர்கள்

Vijay: "நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா" - விஜய்க்கு அரசியல் அழைப்பு விடுக்கும் ரசிகர்கள்

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 21, 2023 11:15 AM IST

நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா என்ற வாசகங்களுடன் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

விஜய்
விஜய்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் விஜய் நாளை தனது 49 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர் பெரு மகிழ்ச்சியுடன் அவரது பிறந்த நாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையல் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் சமீப காலமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தன் படங்களிலும் அரசியல் குறித்து அவ்வப்போது பேசி வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது வாய்ப்புள்ள இடங்களில் அரசியல் பேச தவறிவில்லை. இதன் ஒரு பகுதியாக விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் அரசியல் நடவடிக்கையாக உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்பு, அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் நினைவு தினம் உள்ளிட்டவற்றில் பங்கேற்கு, நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த 10 ,12ம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா உட்பட தொகுதி வாரியாக முதல் 3 இடம் பிடித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா என்ற வாசகங்களுடன் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளை நடிகர் விஜய் கடந்த ஜூன் 17 நேரில் சந்தித்து கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 234 தொகுதிகளில் இருந்து சுமார் 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியையொட்டி, மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்றோர்களுடன் நேற்று சென்னை அருகே வந்து தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர், விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளிட்டோருக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் கல்வி விருது விழா நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் 2 கோடி ரூபாய் செய்திருப்பதாக தகவல் வெளியாகினது. நிகழ்ச்சி நடைபெறும் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர் அரங்கத்திற்கு வாடகை மட்டும் 40 லட்ச ரூபாய் ஆகும். காலை, மதிய உணவு மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்குவதற்கான மண்டப செலவு என அனைத்தையும் விஜய் ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்