தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott This Week: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? - இதோ லிஸ்ட் !

OTT This Week: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? - இதோ லிஸ்ட் !

Karthikeyan S HT Tamil
Mar 01, 2023 02:20 PM IST

மார்ச் முதல் வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

ஓடிடியில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல்.
ஓடிடியில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல்.

ட்ரெண்டிங் செய்திகள்

தி கிரேட் இந்தியன் கிச்சன்

மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்த திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ (The Great Indian kitchen). இந்த திரைப்படத்தைத் தமிழில் எடுத்துள்ளார் இயக்குநர் கண்ணன். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல், ரவீந்திரன் உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

தலைக்கூத்தல்

சமுத்திரகனி, கதிர், வசுந்தரா நடிப்பில் திரையரங்களில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம் ‘தலைக்கூத்தல்’. 'லென்ஸ்' இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருந்த இப்படம் மார்ச் 3 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது.

ஓடிடியில் வெளியாகும் மற்றமொழிப் படங்கள்

மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘அலோன்’ திரைப்படம் வரும் மார்ச் 3-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரித்விராஜ், மஞ்சுவாரியர், சித்திக், மல்லிகா சுகுமாறன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதேபோல் அத்ரிஷ்யம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. தெலுங்கில் 'புட்ட பொம்மா' படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்தியில் குல்முகார் என்கிற திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வருகிற மார்ச் 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்