தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Re Release Movies: காதலர் தின ஸ்பெஷல் - ரீ ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?

Re Release Movies: காதலர் தின ஸ்பெஷல் - ரீ ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?

Aarthi V HT Tamil
Feb 11, 2023 01:00 PM IST

காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் ரீ ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

காதலர் தின ஸ்பெஷல் படங்கள்
காதலர் தின ஸ்பெஷல் படங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆண்டு, காதலர் தினம் செவ்வாய்க் கிழமை வருவதால், பலராலும் விரும்பப்பட்ட ஒரு சில காதல் திரைப்படங்களை மீண்டும் வெளியிட தமிழக திரையரங்குகள் திட்டமிட்டுள்ளன.

காதலர் தினத்தை முன்னிட்டு இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் தமிழ் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளன. அதே போல் இரண்டு மலையாள படங்கள் வெளியாக உள்ளன. தமிழில் வரும் இரண்டுமே கவுதம் மேனன் படங்கள் தான். 

வினைத்தாண்டி வருவாயா

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய  காதல் படம், விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படம் 2010 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. சிம்பு மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்வது இது முதல் முறையல்ல.

மின்னலே

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திரைப்படம் 'மின்னலே'. இந்த திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் மாதவன் மற்றும் ரீமா சென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் இன்னும் ஒரு உன்னதமான காதல் படமாக பார்க்கப்படுகிறது. மாதவனுக்கு 'சாக்லேட் பாய்' என்ற பெயரை வாங்கி கொடுத்தது இந்தப் படம் தான். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழை தொடர்ந்து இந்தி மற்றும் கன்னடத்தில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

பிரேமம்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய மலையாள காதல் படம் பிரேமம். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. மலையாளப் படமாக இருந்தாலும், தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இங்கு பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தமிழகத்தில் ரீ-ரிலீஸ் ஆன முதல் மலையாளப் படம் 'பிரேமம்'.

ஹிருதயம்

வினீத் சீனிவாசன் இயக்கிய படம் ஹிருதயம் படம் 2022  ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களில் தமிழ்நாட்டிலும் நன்றாக வேலை செய்து இப்போது மீண்டும் ரிலீஸ் ஆகிறது ஹிருதயம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்