மோகன் பாபு மன்னிப்பு.. பாடகிக்கு பாலியல் தொல்லை.. கொலை வழக்கில் நடிகர், நடிகைக்கு ஜாமீன்! டாப் சினிமா செய்திகள் இன்று
மோகன் பாபு மன்னிப்பு, பாடகிக்கு பாலியல் தொல்லை, கொலை வழக்கில் கன்னட நடிகர், நடிகைக்கு ஜாமீன், இளையாஜா பயோபிக் குறித்த அப்டேட் உள்பட டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கைது விவகாரம் இன்று நாடு முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்து வந்தது. அவருக்கு இடைக்கால ஜாமீன் வழக்கப்பட்டிருக்கும் நிலையில், சிறை செல்ல இருந்தது தவிர்க்கப்பட்டது. அல்லு அர்ஜுன் கைது தவிர டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
ரேணுகா சாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கெளடாவுக்கு ஜாமீன்
தனது காதலியும், நடிகையுமான பவித்ரா கெளடாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் செய்ததாக ரசிகர் ரேணுகாசாமி என்பவரை பண்ணை வீட்டு வைத்து கன்னட சினிமாவின் ஹீரோவான தர்ஷன் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட கைது செய்யப்பட்டார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த பவித்ரா கெளடாவும் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆறு மாதம் வரை சிறை வாசம் அனுபவித்து வரும் தர்ஷன், பவித்ரா கெளடா ஆகியோரின் முன் ஜாமீன் வழக்கு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இவர்கள் இருவர் உள்பட இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.