தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Michael Trailer: காதல், ஆக்‌ஷன்…தெறிக்கும் மைக்கேல் ட்ரெய்லர்

Michael Trailer: காதல், ஆக்‌ஷன்…தெறிக்கும் மைக்கேல் ட்ரெய்லர்

Aarthi V HT Tamil
Jan 23, 2023 01:36 PM IST

Michael Teaser Released: சுந்தீப் கிஷன் நடித்துள்ள மைக்கேல் பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மைக்கேல் ட்ரெய்லர்
மைக்கேல் ட்ரெய்லர்

ட்ரெண்டிங் செய்திகள்

யாருடா மகேஷ், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசட தபர உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு மைக்கேல் படம் மூலம் ரசிகர்கள் முன்பு வந்தார்.

இந்த படத்தை ரஞ்சித் ஜெயன்கொடி இயக்குகிறார். இதில் கௌதம் மேனன், விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான போஸ்டர்கள் மற்றும் டீஸர்கள் ரசிகர்களிடம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் மைக்கேல் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. அதை பார்க்கும் போது கதாநாயகியை சுற்றியே கதை நடப்பதாகத் தெரிகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கேரக்டர் பவர்ஃபுல் என்பதை காட்டுகிறது. வில்லனாக அவர் பிகில் ராயப்பன் போன்ற பாத்திரத்தில் கம்பீரமாக இருக்கிறார்.

கௌதம் மேனனின் பாத்திரம் அற்புதம். வருண் சந்தேஷ் கூட இதுவரை செய்யாத கதாபாத்திரத்தை ஏற்று நடித்து உள்ளார். இந்தப் படத்தில் வரலட்சுமியும் இருக்கிறார். சந்தீப் ட்ரெய்லர் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

” நான் மனிஷனாகவே இருக்கிறேன், கடவுள்ளாக மாற வேண்டாம்” என சந்தீப் கிஷன் பேசும் வசனத்துடன் ட்ரெய்லர் முடிந்தது. இந்த படம் காதல் மற்றும் ஆக்‌ஷன் கலந்த படமாக இருக்கும் என்பது புரிகிறது.

படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தால் ஒளிப்பதிவும், இசையும் சூப்பர் என்று தெரிகிறது. நடிகர்களைப் பொறுத்த வரையில்.. ல்லாருமே சிறந்த நடிப்பைக் கொடுக்கிறார்கள். ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் சந்தீப் கிஷன் பான் இந்தியா ஹிட் அடிப்பார் என என்று கூறுகிறார்கள்.

ரத்தம் தெறிக்கும் அளவில் ஆக்ஷன் பாணியில் வெளியான மைக்கேல் பட ட்ரெய்லர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மைக்கேல் திரைப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும்இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்