தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthi: 96 இயக்குநர் படத்தில் கார்த்தி?

Karthi: 96 இயக்குநர் படத்தில் கார்த்தி?

Aarthi V HT Tamil
Jan 17, 2023 11:47 AM IST

Karthi With Director Prem kumar: நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தை 96 பட புகழ் பிரேம் குமார் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

96 இயக்குநர் படத்தில் கார்த்தி
96 இயக்குநர் படத்தில் கார்த்தி

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் சுனில், விஜய் மில்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் அனு இம்மானுவேலும் நடிக்கிறார்.

ஜப்பானின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், கார்த்தி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் II படம் மூலம் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

பொன்னியின் செல்வன் II படம் 2023 கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கார்த்தி தற்போது 96 பட புகழ் இயக்குநர் பிரேம் குமாருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரேம் குமார் - கார்த்தி படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் எதுவும் வெளியாக வில்லை. இந்த புதிய படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி மதுரை பகுதியைச் சேர்ந்த மனிதராக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் பணி ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  பொங்கலின் போது நடைபெறும் ஜல்லிக்கட்டு நேரலை காட்சிகளை எடுக்க பிரேம் குமாரும் அவரது குழுவினரும் மதுரை சென்றதாக கூறப்படுகிறது.

இது படத்தின் சில பகுதிகளுக்குத் தேவைப்படுவதாகத் தெரிகிறது. மேலும் இந்தக் காட்சிகளை மீண்டும் உருவாக்குவதை விட உண்மையான காட்சிகளைப் பெறுவது நல்லது என்று குழு முடிவு செய்தது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்