Kamal Haasan: ‘இந்தியன் 3’ வருமா வராதா?.. தக் லைஃப் ஷூட்டிங் எப்போது? - ஓப்பனாக போட்டுடைத்த கமல்ஹாசன்!-kamal haasan shares update on indian 2 indian 3 thug life and kalki 2898 ad - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal Haasan: ‘இந்தியன் 3’ வருமா வராதா?.. தக் லைஃப் ஷூட்டிங் எப்போது? - ஓப்பனாக போட்டுடைத்த கமல்ஹாசன்!

Kamal Haasan: ‘இந்தியன் 3’ வருமா வராதா?.. தக் லைஃப் ஷூட்டிங் எப்போது? - ஓப்பனாக போட்டுடைத்த கமல்ஹாசன்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 25, 2024 01:03 PM IST

அண்மையில் நடந்த உரையாடல் ஒன்றில் பிரபல நடிகரான கமல்ஹாசன் இந்தியன் 2, இந்தியன் 3, தக் லைஃப், கல்கி 2898 AD உள்ளிட்ட திரைப்படங்களின் அப்டேட்டைகளை கொடுத்திருக்கிறார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தின் ஷுட்டிங் தொடங்கும். அதன் பின்னர் கல்கி திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன்” என்றார்.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியின் மூலம், சரிந்து கிடந்த தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்தினார் நடிகர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து ஏற்கனவே தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இந்தப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்தப்படம் தொடர்பான வேலைகள் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் போதே, மணிரத்னத்துடன் இவர் இணையும் தக் லைஃப் படம் குறித்தான அப்டேட் வெளியாகியது. இதற்கிடையே தெலுங்கில் பிரபாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் கல்கி 2898 AD படத்திலும் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் அவர் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இது தவிர கமல்ஹாசன் நடிப்பில் 90களில் வெளியான குணா திரைப்படத்தை சிறப்பு செய்யும் வண்ணம், மலையாள திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் அந்தப்படத்தில் இடம்பெற்ற  ‘கண்மணி அன்போடு’ பாடல் இடம் பெற்றது. கதையும் குணா படம் ஷூட் செய்யப்பட்ட குகையை சுற்றி அமைக்கப்பட்டு இருந்தது. இந்தப்படம் மக்களுக்கு வெகுவாக பிடித்த நிலையில், அந்தப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று 200 கோடி ரூபாய் வசூல் செய்தது.இதனையடுத்து  படக்குழுவினரை கமல் நேரில் அழைத்து பாராட்டினார்.

முன்னதாக, ‘குணா’ படத்திற்காக கமல்ஹாசன் எப்படி குணா குகையை கண்டுபிடித்தார் என்பதை அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராசி அழகப்பன் வாவ் தமிழா சேனலுக்கு பேசி இருந்தார்.

அவர் பேசும் போது, “ அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் படங்களுக்கு பிறகு, எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்வது போல ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று கமல் நினைத்தார்.

எப்போதுமே கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் முடிந்த பின்னர், கமலை அனந்து அழைத்து பேசுவது வழக்கம். அந்த வகையில்தான் அப்போதும் அனந்து கமலை அழைத்திருந்தார்.

அவரிடம் அடுத்தப்படம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்த போது அனந்துதான் கடவுள் மீது ஒரு பக்தன் எவ்வளவு முரட்டுத்தனமான பக்தியோடு இருப்பானோ, அதே போன்று ஒரு கதாபாத்திரம் தன்னுடைய காதலியை பார்த்தால் எப்படி இருக்கும் என்று சொன்னார். கதை நகர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் இதுதான் கதை என்று முடிவு செய்தோம்.

லொக்கேஷன் பற்றி பேசும் போது கதாபாத்திரம் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவன் போல இருப்பதால், குளிர் பிரதேசத்தில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று முடிவு செய்தோம்.

முதலில் குணசீலம் என்ற பகுதியில் படத்தை எடுக்க முடிவு செய்து பின்னர் அந்த லொக்கேஷன் கொடைக்கானலுக்கு மாறியது. கமல் சார் நான், சந்தான பாரதி உள்ளிட்டோர் லொக்கேஷன் பார்ப்பதற்காக கொடைக்கானலுக்கு சென்று இருந்தோம்.

அங்கு ஒரு முஸ்லிம் டிரைவர்தான் எங்களுக்கு வழிகாட்டியாக வந்தார். லொக்கேஷன் பார்த்துக்கொண்டே சென்ற போது, திடீரென ஒரு இடத்தில் சடாரென்று நில்லுங்கள் அங்கே செல்லாதீர்கள். விழுந்தால் எலும்பு கூட கிடைக்காது என்று அந்த ட்ரைவர் எச்சரித்தார்.

அவர் சொன்னவுடன் அங்கிருந்து எல்லோரும் சென்றுவிடலாம் என்று கிளம்ப, கமல் சார் மட்டும் கிளம்பவில்லை. கமல் சாரை பொருத்தவரை யாராவது ஒன்று முடியாது என்று சொன்னால், அதை அவருக்கு முடித்து காட்ட வேண்டும்.

அவர் அந்த ஆபத்தான இடத்தை நோக்கி சென்றார். உள்ளே எட்டிப்பார்த்தால் கும்மிருட்டுடாக இருந்தது. கமல் சார் ஒரு கல்லை எடுத்து உள்ளே போட்டார். அந்த கல் 25 நொடிகள் டிராவல் செய்து அந்த குகைக்குள் சென்று விழுந்தது.

இதனையடுத்து கமல்ஹாசன் அந்த முஸ்லிம் டிரைவரிடம் குகை மிகப்பெரியதாகதான் இருக்கிறது. ஆனால் நாம் அதன் தரையை தொட்டு படம் எடுப்போம் என்றார். அதனைக்கேட்டு அவன் அதிர்ந்து போனான்.

முதற்கட்டமாக குணா குகையின் வெளியே ஒரு பாலம் போன்ற அமைப்பை உருவாக்கி, அதில் கயிறு கட்டினோம். கயிறைப்பிடித்து எல்லோரும் உள்ளே இறங்க பயந்த போது, கமல் சார்தான் முதல் ஆளாக உள்ளே இறங்கினார். அதன் பின்னர்தான் நாங்கள் உள்ளே இறங்கினோம். ” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.