தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lal Salam: ரஜினிகாந்த் தங்கையாக பிரபல நடிகை?

Lal Salam: ரஜினிகாந்த் தங்கையாக பிரபல நடிகை?

Aarthi V HT Tamil
Mar 01, 2023 12:08 PM IST

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் தங்கையாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜீவிதா ராஜசேகர்
ஜீவிதா ராஜசேகர்

ட்ரெண்டிங் செய்திகள்

ஏற்கனவே தனது இளைய மகள் செளந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்தில் நடித்த ரஜினிகாந்த், தற்போது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 7 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளன. 

இந்நிலையில் இதில் ரஜினிகாந்தின் தங்கையாக பழம்பெரும் நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்க உள்ளார். அவர் மார்ச் 7 ஆம் தேதி முதல் லால் சலாம் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். படப்பிடிப்புக்காக சென்னை செல்ல உள்ளார்.

ஜீவிதா 80களில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகை. பின்னர், பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்தினார். லால் சலாம் படத்தின் மூலம் 25 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் வருகிறார்.

 ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரஜினிகாந்த், ஜீவிதா ராஜசேகர் மற்றும் பலரின் படப்பிடிப்பில் இதில் படமாக்க திட்டமிட்டு உள்ளது.

இயக்குநராக ஐஸ்வர்யா இயக்கும் நான்காவது படம் இது. இது ஹிட் ஆகுமா? அல்லது இல்லை என்பதை பொறுத்து இருந்ு தான் பார்க்க வேண்டும். 

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த '3' படத்தின் மூலம் மெகாஃபோனைப் பிடித்தார் ஐஸ்வர்யா. இயக்குநராக அவர் இயக்கிய முதல் படமே வெற்றி பெறவில்லை. ஆனால், 'வை திஸ் கொலவெறி டி'  பாடல் சூப்பர் ஹிட்டானது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்