தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Veeram Hindi Remake: அஜித்தின் வீரம் படத்தை கோரம் ஆக்கிய சல்மான்கான்

Veeram Hindi Remake: அஜித்தின் வீரம் படத்தை கோரம் ஆக்கிய சல்மான்கான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 26, 2023 11:57 AM IST

தமிழ் உள்பட தென்னிந்திய சினிமாக்களை ரீமேக் என்ற பெயரில் ரோஸ்ட் செய்து உருவாக்குவதில் வல்லவர்கள் பாலிவுட்டினர். சமீபத்தில் வெளியான கைதி டீஸர் இதற்கு உதாரணம். தற்போது அஜித்தின் வீரம் ரீமேக்காக சல்மான்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் கிசி கா பாய் கிசி கி ஜான் படமும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.

வீரம் இந்தி ரீமேக் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் சல்மான்கான்
வீரம் இந்தி ரீமேக் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் சல்மான்கான்

ட்ரெண்டிங் செய்திகள்

அத்துடன் காமெடி, ஆக்‌ஷன், காதல், சென்டிமெண்ட் என அனைத்து கலந்த கலவயாக வீரம் படம் அமைந்திருந்தது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படமாக ஆக்கியது.

இதையடுத்து வீரம் படத்தை தெலுங்கில் கட்டமராயுடன் என்ற பெயரில் ரீமேக்க, அதில் பவன் கல்யாண் நடித்திருந்தார். தமிழை போல் தெலுங்கிலும் பல மாஸ்ஸான காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கிலும் ஹிட்டடித்து.

இதைத்தொடர்ந்து பாலிவுட்டினர் முறைக்கு வீரம் படம் செல்ல அதில் சல்மான்கான் நடிப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் அவை அனைத்தும் படத்தின் டீஸர் வெளியீட்டுக்கு புஸ்வானமாகியுள்ளது.

கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற பெயரில் உருவாகியிருக்கும் வீரம் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இதை பார்த்த பின் ரசிகர்கள் நம்புகிறார்களோ இல்லையோ, வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவே நம்பாத விதமாக காட்சிகள் இடம்பிடித்துள்ளது.

வீரம் இந்தி ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
வீரம் இந்தி ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

வேட்டி சட்டை அஜித் இங்கு அப்படியே கோட்டு சூட் சல்மானாக மாறியிருக்கிறார். அத்துடன் அந்நியன் விக்ரம் போன்று நீண்ட தலைமுடியுடனும் ஒரு கெட்டப்பில் தோன்றுகிறார். இதை பார்த்த சால்மானின் ரசிகர்கள் வழக்கம்போல் வாவ் என ஹார்ட்டும், பயரும் விட்டு வரும் நிலையில், இதர ரசிகர்கள் மற்றும் நம்மூர் ஆட்களோ வீரம் படத்தில் வரும் ஒரு காட்சியாக இந்த டீஸரில் உள்ளதா என பூதக்கண்ணாடி வைத்து தேடி வருகிறார்கள்.

வழக்கம் ரீமேக் என்ற பெயரில் உருவாகும் படங்களில் நடிக்கும் நடிகருக்கு ஏற்ப சில மாஸ் காட்சிகள் சேர்ப்பது இயல்பானதுதான். ஆனால் அடிப்பதை கதையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், ஏதாவது வித்தியாசமான டுவிஸ்ட் வைத்து சிறிய மாற்றம் செய்வது ஒரிஜினல் படத்தின் தாக்கத்தை அப்படியே ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தும். இதை தமிழ், தெலுங்கு ரீமேக்கின்போது இயக்குநர்கள் சரியாக கையாளவார்கள்.

பூஜா ஹெக்டேவுடனான ரொமான்ஸ் காட்சியில் நீண்ட தலைமுடியுடன் சல்மான்கான்
பூஜா ஹெக்டேவுடனான ரொமான்ஸ் காட்சியில் நீண்ட தலைமுடியுடன் சல்மான்கான்

ஆனால் பாலிவுட்டில் எப்போதும் ரீமேக் என்று சொல்லிவிட்டு, ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றுகிறேன் பேர்வழி என்ற பெயரில் மொத்த கதையையும் குழப்பி எடுத்து மரண மாஸாக உருவாக்கியிருப்பது போல் தோற்றத்தை உருவாக்குவார்கள். அப்படியான ஒரு உணர்வை ஏற்படுத்தும் விதமாக வீரம் படத்தை ரீமேக் செய்கிறேன் என்ற பெயரில் அகோரம் ஆக்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான கைதி படத்தின் ரீமேக்கான போலா டீஸரில் கூட இதேநிலைமைதான் ஏற்பட்டது. கைதி படத்தின் ஹைலைட்டான விஷயமே ஹீரோயின் கிடையாது, பாடல் கிடையாது என்று இருந்த நிலையில் அதை அப்படியே புரட்டிபோட்டு ஹீரோயினாக தபு, ஒரு குத்து பாடல், இண்ட்ரோ பில்டப் பாடல் என காட்சிகள் ரசிகர்களை டயர்டு ஆக்குவதாகவே அமைந்திருந்தது.

கொரோனா காலத்துக்கு பின் கடந்த ஆண்டு தமிழ் மற்றும் தென்இந்தியா சினிமாக்களுக்கு சிறப்பாக அமைந்த நிலையில், பாலிவுட்டில் விரல் விட்டு எண்ணும் அளவுதான் படங்கள் ஹிட்டாகின. இந்த சூழ்நிலையில் ரீமேக் என்ற மினிமம் கியாரண்டியை கையில் வைத்துக்கொண்டு அதை முழுவதுமாக ரோஸ்ட் செய்து இதுபோன்ற பில்டப்பில் படம் எடுப்பது தொடர்வது ரசிகர்களை இழக்கும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்