Ethirneechal: தலை சுற்ற வைக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஹீரோயின்களின் சம்பளம்? - ஒரு நாளுக்கு இவ்வளவா..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: தலை சுற்ற வைக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஹீரோயின்களின் சம்பளம்? - ஒரு நாளுக்கு இவ்வளவா..

Ethirneechal: தலை சுற்ற வைக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஹீரோயின்களின் சம்பளம்? - ஒரு நாளுக்கு இவ்வளவா..

Aarthi Balaji HT Tamil
Jan 28, 2024 11:09 AM IST

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஹீரோயின்களின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்

அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.

அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.

ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டி. ஆர். பியில் கடும் அடியை சந்தித்தது. தற்போது மீண்டும் மெல்ல மெல்ல முன்னெறி மூன்றாவது இடத்திற்கு வந்து உள்ளது. 

அதுவும் தற்போது அந்த வீட்டு பெண் தர்ஷினியை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள். அது தான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருக்கிறது. இதன் விளைவே எதிர்நீச்சல் சீரியலின் டி. ஆர். பி உயரத்திற்கு காரணமாக அமைந்து உள்ளது.

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஹீரோயின்களின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி, ஈஸ்வரி - ஒரு நாளுக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக பெற்று வருகிறார். சீரியலின் கதாநாயகியான ஜனனிக்கு ஒரு நாளுக்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

நந்தினியாக நடிக்கும் ஹரிப்பிரியாவுக்கு ஒரு நாளுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைத்து வருகிறது. ரேணுகா என்ற பிரியதர்ஷினிக்கு ஒரு நாளுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. குணசேகரின் அம்மா விசாலாட்சி என்கிற சத்யபிரியாவு 8 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

அவர் பேச்சு மட்டுமே வேதவாக்கு என வாழ்ந்து வந்த தம்பி கதிர் தற்போது அண்ணன் ஆதி குணசேகரனுக்கு எதிராகவே மாறி இருப்பது சற்று வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் கடைசியாக கதிருக்கு எல்லாம் புரிந்துவிட்டதே, இனியாவது நல்ல மனிஷனாக இவர் வாழ வேண்டும். இவரை போல் இரண்டாவது அண்ணனும் மாறினால் ஆதி குணசேகரன் ஆட்டம் அடங்கிவிடும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.