தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  P.s.mithran: காதலியை கரம்பிடித்த பி.எஸ்.மித்ரன்… மணப்பெண் யார்?

P.S.Mithran: காதலியை கரம்பிடித்த பி.எஸ்.மித்ரன்… மணப்பெண் யார்?

Aarthi V HT Tamil
Feb 12, 2023 01:49 PM IST

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தனது நீண்ட நாள் காதலியான ஆஷாமீரா ஐயப்பனை திருமணம் செய்துகொண்டார்.

பி.எஸ்.மித்ரன்
பி.எஸ்.மித்ரன்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆன்லைனில் நடக்கும் நூதன மோசடிகளை வெளிச்சத்தில் காட்டியது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்தார்.

2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய ஹீரோ திரைப்படம் கல்வியில் நடக்கும் ஊழல்களைப் பற்றி பேசியது. சிவகார்த்திகேயன்  ஹீரோவாக நடித்திருந்த இதில் இரும்புத்திரையில் வில்லனாக மிரட்டிய ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வெற்றி பெறவில்லை. 

இதையடுத்து நடிகர் கார்த்தி உடன் கூட்டணி போட்டார் பி.எஸ்.மித்ரன். இதில் கார்த்தி தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் மற்றும் சினிமா பத்திரிகையாளரான ஆஷாமீரா ஐயப்பனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு இரண்டு வீட்டாரும் சம்மாதம் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் எளிமையாக இன்று ( பிப்ரவரி 12 ) திருமணம் நடந்து முடிந்து உள்ளது. 

இவர்களது திருமணத்தில் மேயாத மான், ஆடை போன்ற படங்களின் இயக்குநர் ரத்னகுமார் மற்றும் அயலான் படத்தின் இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பி.எஸ்.மித்ரன் - ஆஷா மீரா ஜோடியில் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கே. ஜி. எஃப் நாயகன் யாஷுடன், இயக்குநர் பி. எஸ். மித்ரன் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்