தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Chandramukhi 2: சந்திரமுகி 2 ஃபீவர்.. உதவி இயக்குநர்களுக்கு லேப்டாப்.. மூத்த இயக்குநர் கொடுத்த முத்தான பரிசு!

Chandramukhi 2: சந்திரமுகி 2 ஃபீவர்.. உதவி இயக்குநர்களுக்கு லேப்டாப்.. மூத்த இயக்குநர் கொடுத்த முத்தான பரிசு!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 16, 2023 11:50 AM IST

பி. வாசுவின் பிறந்த நாளை முன்னிட்டு 'சந்திரமுகி 2 ' படக் குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது!

ராகவா லாரன்ஸ்!
ராகவா லாரன்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'சந்திரமுகி 2'. 

இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியிருக்கும் இப்படத்தில் ராகவா லாரன்சுடன் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராக இருக்கும் இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. 

படத்தின் இயக்குநர் பி. வாசுவின் பிறந்தநாளான நேற்று அவரை ஜி. கே. எம். தமிழ் குமரன், ராகவா லாரன்ஸ் மற்றும் பி. வாசுவின் உதவியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இதன் போது இயக்குநர் பி. வாசு தன்னுடைய உதவியாளர்களுக்கு லேப்டாப்களை பரிசாக வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

'சந்திரமுகி 2' படத்தின் முன்னோட்டம் வெளியாகி பல மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் முன்னோட்டதை பார்த்து இருக்கிறார். 

இந்நிலையில் இந்த திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதியன்று உலகம் முழுதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்