Director Lenin: 'குழந்தைகளுக்கான படங்களை திரையிடணும்' - இயக்குநர் லெனின் வேண்டுகோள்
குழந்தைகளுக்கான தனிப்படங்களை குழந்தைகளே எழுதும் படங்களை தயாரிக்க மானியம் கொடுக்கவும் அரசு முன் வர வேண்டும் என கேட்டு கொண்டார்.

இயக்குநர் லெனின்
ஆவணப்படங்கள் குறும்படங்கள் ஆகியவற்றுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தேசிய விருது பெற்ற பிரபல எடிட்டரும் இயக்குனருமான பி.லெனின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் 69"வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 2021"ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்டன.
அதில் பிரபல எடிட்டரும் - இயக்குனருமான பி.லெனின் இயக்கிய ஆவணப் படமான "சிற்பிகளின் சிற்பங்கள்"சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.