தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Cheran: ‘விஜய் மாதிரி எத்தன பேர் வந்தாலும்.. உறுப்பினர்கள சுத்தமா.. ’ - சேரன் பளார்!

Director cheran: ‘விஜய் மாதிரி எத்தன பேர் வந்தாலும்.. உறுப்பினர்கள சுத்தமா.. ’ - சேரன் பளார்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 04, 2024 11:58 AM IST

நம்மகிட்ட எதையோ எதிர்பார்கிறாங்கன்னு அர்த்தம்.அவங்களை கிட்ட சேர்த்தா நாம மக்களை விட்டுட்டு அவங்களுக்கு பதில்சொல்ல வேண்டி வரும் -சேரன்!

சேரன்!
சேரன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் அண்மையில் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்திருக்கும் அவர் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே இலக்கு என்பதையும் கூறிவிட்டார்.

அதே போல சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியல் வாதியாகவும் தான் மாற இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். 

இவரது இந்த முன்னெடுப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளும், விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் பிரபல டைரக்டரான சேரன் விஜயின் அரசியல் வருகையை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

நெட்டிசன் ஒருவர் சேரன் இயக்கத்தில், சோனி ஓடிடி தளத்தில் வெளியான ஜர்னி திரைப்படத்தில், ஆரி ஏற்று நடித்திருந்த பிரணவ் கதாபாத்திரம் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு, படத்தில் அந்த கதாபாத்திரம் பேசிய வசனங்களான  “"யார் ஒருத்தர் வேட்பாளருக்கு செலவு பண்ண வர்றேன்னு சொல்லறாங்களோ, பின்னாடி நம்மகிட்ட எதையோ எதிர்பார்கிறாங்கன்னு அர்த்தம்.அவங்களை கிட்ட சேர்த்தா நாம மக்களை விட்டுட்டு அவங்களுக்கு பதில்சொல்ல வேண்டி வரும்” என்பதையும் ஷேர் செய்திருந்தார். 

ட்ரெண்டிங் செய்திகள்

இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் சேரன், “ இனிமேல் இந்த மாதிரி காட்சிகள் எப்படத்தில் வந்தாலும் புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர் விஜய் போன்றவர்களுக்கு அனுப்பினால் முதலிலேயே தங்களின் கட்சி உறுப்பினர்களை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தும்.. 

#JOURNEY எதை செய்யக்கூடாது என்ற தெளிவு அவசியம்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இனிமேல் இந்த மாதிரி காட்சிகள் எப்படத்தில் வந்தாலும் புதிதாக கட்சி ஆரம்பிக்கும்” என்று பதிவிட்டு இருக்கிறார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9