தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dada Director: டாடா பட இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்

Dada Director: டாடா பட இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்

Aarthi V HT Tamil
Feb 11, 2023 12:02 PM IST

டாடா படத்தின் இயக்குநர் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளர்.

டாடா
டாடா

ட்ரெண்டிங் செய்திகள்

அதனால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் காதல் சர்ச்சையில் சிக்கினார். இருப்பினும் பிக் பாஸ் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதனையடுத்து அவர் நடித்த லிஃப் திரைப்படமும், ஆகாச வாணி என்ற வெப் சீரிஸும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. 

அவர் நடிப்பில் 4 வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் டாடா. அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படம் மூலம் பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.

திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. 

இந்நிலையில் டாடா படம வெளியான முதல் நாளிலேயே இயக்குநருக்கு ஜாக்பாட் அடித்து இருக்கிறது. ஆம்... புது இயக்குநர் கே. கணேஷ் பாபு தனது அடுத்த படத்திற்கான வாய்ப்பை பெற்று உள்ளார்.

லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தை கே. கணேஷ் பாபு இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

அதில், "எங்கள் அடுத்த திட்டத்தில் கே. கணேஷ் பாபு கையெழுத்திட்டு உள்ளார் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” எனக் குறிப்பிட்டு உள்ளது.

படம் வெளியான முதல் நாளிலேயே இயக்குநருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்து இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படவைத்து உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்