தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sakthi: குக் வித் கோமாளியில் கலந்து கொண்டால் கார் வாங்கிடலாமா?

Sakthi: குக் வித் கோமாளியில் கலந்து கொண்டால் கார் வாங்கிடலாமா?

Aarthi V HT Tamil
Feb 02, 2023 12:25 PM IST

குக் வித் கோமாளி நகழ்ச்சி மூலம் பிரபலமான சக்தி புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

 சக்தி
சக்தி

ட்ரெண்டிங் செய்திகள்

பிக்பாஸ் 6 ஆவது சீசன் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி 4 ஆவது சீசன் தொடங்கிவிட்டது. தற்போது நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டு விட்டது, போட்டியாளர்கள் பலரும் நமக்கு தெரிந்த முகங்ளாக இருக்கின்றனர். ஆனால் கோமளிகளில் பழைய முகங்கள் குறைவாகவே காணப்படுகின்றனர்.

இந்நிலையில் டிக் டாக் செயலியில் மூலமாக வீடியோக்களை செய்து சமூக வலைதளங்களில் வைரலான சக்தி, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இன்னும் பிரபலமடைந்தார். இவர் தொடர்ந்து இரண்டு சீசன்களில் கோமளியாக கலந்து கொண்டார்.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சக்தியை பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கிறார்கள்.

இதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வந்த சக்தி புதிய கார் ஒன்று வாங்கி உள்ளார். கார் வாங்கும் போது அவருடன் புகழ் இருந்து உள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சக்தி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். அதில், ”ஓம் நமசிவாய. என் புதிய மகள் மயிலு. உங்கள் அனைவரின் அன்புடனும், ஆதரவுடனும் எனது முதல் காரை மக்களே வாங்கினேன். புகழ் அண்னா லவ் யூ. என் எல்லா தொடங்கத்தில் இருக்கும் என் அண்ணா” எனக் குறிப்பிட்டு உள்ளர்.

சக்தி பதி்வை பார்த்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

முன்னதாக குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட புகழ் மற்றும் மணிமேகலை அடுத்தடுத்து விலை உயர்ந்த கார்களை வாங்கினார்கள். அதனால் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டால் கார் வாங்கிவிடலாமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்