Manjummel Boys: "ஒத்த ரூபாய் கூட தரல" மஞ்சும்மெல் பாய்ஸ் பைனாஸ்சியர் குமுறல் - தயாரிப்பாளர்கள் மீது வழக்கு
மலையாள சூப்பர் ஹிட்டான மஞ்சுமெல் பாய்ஸ் படம், பிற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் கோடிகளுக்கு மேல் வசூலித்த மலையாள படம் என்ற பெருமையும் பெற்றது. இந்த படத்தின் பைனான்ஸியரை ஏமாற்றியதாக படத்தின் தயாரிப்பாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மஞ்சும்மெல் பாய்ஸ் பட போஸ்டர்
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதுடன் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலை பெற்ற படமாக மஞ்சும்மெல் பாய்ஸ் உள்ளது.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நண்பர்கள், அங்கிருக்கும் குணா குகையில் தவறி விழும் தனது நண்பனை எப்படி மீட்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.
படத்தின் க்ளைமாக்ஸில் குணா படத்தில் வரும் பாடல் இடம்பிடித்திருந்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. முன்னணி நடிகர்கள் யாரும் இல்லாமல் புதுமுக நடிகர்கர்கள் நடித்திருந்த இந்த படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் ரசிகர்கள் படத்தை வெகுவாக கொண்டாடினார்கள். கோலிவுட் பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டினார்கள்.