Bigg Boss Tamil 7: பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் களமிறங்கும் புது நடிகை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil 7: பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் களமிறங்கும் புது நடிகை!

Bigg Boss Tamil 7: பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் களமிறங்கும் புது நடிகை!

Kalyani Pandiyan S HT Tamil
Published Sep 10, 2023 12:23 PM IST

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஒருவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ்
பிக்பாஸ் தமிழ்

அந்த வகையில் கடைசியாக ஒளிப்பரப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசனின் வின்னராக சின்னத்திரை நடிகர் அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடன் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைக்கட்சியைச் சேர்ந்த விக்ரம் தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் விஜய் டிவி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் விரைவில் ஒளிப்பரப்ப உள்ளதாகவும் அதனை கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாகவும் அண்மையில் விஜய் டிவி அறிவித்தது. அது தொடர்பான புரமோவும் வெளியாகி வைரல் ஆனது. இதனையடுத்து வெளியான அடுத்த புரமோவில் இந்த முறை பிக்பாஸ் வீடு இரண்டு வீடுகளாக வருகிறது என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முந்தைய சீசனில் களமிறங்கிய நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ் கோபாலசாமி, ரேகா நாயர், பப்லு பிரித்திவிராஜ், குக் வித் கோமாளி ரக்‌ஷன், நடிகர் அப்பாஸ், அம்மு அப்ராமி, மாடல் ரவிக்குமார், மாடல் நிலா,  நடிகர் சந்தோஷ் பிரதாப், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகர் பப்லு, அகில், சோனியா அகர்வால், விஜே பார்வதி, பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா, நடிகர் விக்னேஷ், பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகை தர்ஷா குப்தா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.