தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bharathi Kannan: ‘ஓடுற குதிரையில் பந்தயம் கட்டும் ஹீரோக்கள்’ டோட்டல் டேமேஜ் செய்த பாரதி கண்ணன்!

Bharathi Kannan: ‘ஓடுற குதிரையில் பந்தயம் கட்டும் ஹீரோக்கள்’ டோட்டல் டேமேஜ் செய்த பாரதி கண்ணன்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 25, 2024 11:49 AM IST

எல்லா நடிகர்களும் ரஜினிசார் உட்பட ஜெயிக்கிற குதிரையின் மீது மட்டுமே பயணம் செய்ய ஆசைப்படுவார்கள். ரஜினி சாரே ஒரு சாதாரண புது டைரக்டராக இருந்து படம் சூப்பர் ஹிட் என்றால் கூப்பிட்டு கதை கேட்கிறார்.

இயக்குநர் பாரதி கண்ணன்
இயக்குநர் பாரதி கண்ணன்

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் அஜித் சார் கூட படம் பண்ண வேண்டிய சூழல் வந்தும் பண்ண முடியாமல் போனதற்கான காரணம் என்ன கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.

எல்லா நடிகர்களும் ரஜினிசார் உட்பட ஜெயிக்கிற குதிரையின் மீது மட்டுமே பயணம் செய்ய ஆசைப்படுவார்கள். ரஜினி சாரே ஒரு சாதாரண புது டைரக்டராக இருந்து படம் சூப்பர் ஹிட் என்றால் கூப்பிட்டு கதை கேட்கிறார். தனக்கு வயதாகி விட்டது. இவருடைய திறமைக்கு உள் நாம் போய்விட்டால் அவர்கள் கொண்டு போய் நம்மை கரை சேர்த்து விடுவார் என்ற நம்பிக்கைக்கு ஆளாகிறார்கள்.

எப்போதுமே சூப்பர் ஸ்டாராக இருக்க கூடியவர்கள் அஜித், விஜய் மாதிரியான இருப்பவர்கள் எல்லாம் கொஞ்சம் சொபிஷ்டிகேட்டாக இருக்கிறார்கள்.

நாம் போறோம் ஆக்ட்பண்றோம் படம் ஓடணும். அதுக்கு தகுந்த மாதிரி எவன் ஓடிக்கிட்டு இருக்கான். இந்த டைரக்டர் ஹிட்டா. அவன் சுமாரா ஒரு கதைய சொன்னாலும்; இல்ல அவர் நல்ல எடுத்துடுவார் அப்படினு நடிக்குறாங்க. இந்த கால கட்டத்தில் சாதாரண டைரக்டர்கள் எல்லாம் பெரிய நடிகர்களின் டேட் வாங்குறது எல்லாம் கஷ்டம். குடுக்கமாட்டாங்க என்ன பிரண்ட்ஸா இருந்தாலும் பழகினாலும் தரமாட்டாங்க.

உதாரணத்திற்கு சூர்யாவ வச்சு சூப்பர் ஹிட் குடுத்த ஒரு டைரக்டர் அவருக்கு படங்கள் இல்ல. அவர் போய் சூர்யாகிட்ட கேக்குறார். எனக்கு டேட் குடுங்கணு. ஆனா சூர்யா கூட இல்ல.. வெற்றி மாறன் கிடைச்சா நல்ல இருக்குமே என்று நினைக்குறார். அவர் சார் உங்களுக்கு பணம் ஏதாவது வேணா நா ஹெல்ப் பண்றேன் டேட் என்னால கொடுக்க முடியாதுன்றார்.

பேரரசுன்ற டைரக்டர்.. விஜய் சார வச்சு இரண்டு திருப்பாச்சி, சிவகாசி என்ற இரண்டு சில்வர் ஜூப்லி படங்களை கொடுத்தார். அப்பேர்பட்ட டைரக்டர்க்கு விஜய் நாள் கொடுக்க மாட்டிகிறார். ஆனால் பரதன் என்ற டைரக்டரின் படங்கள் பெயிலியரானாலும் அவருக்கு கண்டின்யூவா படம் கொடுக்குறார். இந்த வெற்றி பட டைரக்டர் பழசா தெரியுறார். இது என்ன கான்செப்னே தெரில.

லால் சலாம் படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாரதி கண்ணன், நல்ல சீன்கள் வந்துள்ளது. நான் கூட இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல. ரஜினிசார் பொண்ணு ஏதோ ஒரு டைரக்டர வச்சு பண்ணுவாங்க. அவங்க ஒரு பேக்ரவுண்ட்ல இருப்பாங்கன்னு நினைச்சு தா நா வந்தேன். ஆனா எவரி ஷாட், ஸ்டாட் கேமரால இருந்து, ஆக்ஷன், கட் ரோலிங் , சாங், பைட் எல்லாத்துலயும் டிராவல் பண்ணி எனர்ஜிட்டிக்கா ஒர்க் பண்ணாங்க. சவுண்டு கொஞ்சம் கூட வால்யூம் குறையாம ஒர்க் பண்ணாங்க என்றார்.

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து லால் சலாம் எப்படி ஒர்க் பண்றார் ரஜினி என்ற கேள்விக்கு,

ரஜினி சாரை பொருத்த வரை ஒரு மாஸ் படம் பாட்ஷா, பண்ணிட்டு ஒரு சாதாரண ஒரு காமடி படம் முத்துனு ஒரு படம் பண்ணார். அப்போ அவர் பாட்ஷாவ கம்பர் பண்ணி ஆடியன்ஸ் பண்ணல. சாதாரண வீரானு ஒரு படம் பாட்ஷா படம் பண்ணுனார். இப்படி ஒரு படம் பண்ணுவாரான்னு யோசிச்சோம். ஆனா மக்கள் ரஜினி சாரை ஏத்துக்க தயாரா இருக்காங்க. அதயெல்லாம் மக்கள் பாக்கல.

மேலும் தமிழ் சினிமாவில் படங்களில் டைட்டில் வைக்கிறதில் கொஞ்சம் கவனமா இருக்கணும். புரியாத மாதிரி டைட்டில் வைக்குறாங்க. இப்பயெல்லாம் சினிமா குளோஸ் ஆகிடுச்சு. உங்களுக்கு தெரியுமா சமீபத்தில் வந்த படங்கள் ஷோ பிரேக் ஆகுதுங்க என்றார். ஏதோ பெரிய நடிகர்களால் 10 நாளைக்கு திறந்து ஓடிக்கிட்டு இருக்கு. என்பது போன்ற பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

நன்றி: Take 1

IPL_Entry_Point

டாபிக்ஸ்