தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan: மசாஜ் சென்டரில் மஜா.. நடிகையால் சிக்கும் சிவகார்த்திகேயன் - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்

Sivakarthikeyan: மசாஜ் சென்டரில் மஜா.. நடிகையால் சிக்கும் சிவகார்த்திகேயன் - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்

Marimuthu M HT Tamil
Jan 24, 2024 09:10 PM IST

சிவகார்த்திகேயனைப் பற்றிய புதிய சர்ச்சையை பயில்வான் ரங்கநாதன் உருவாக்கியுள்ளார்.

மசாஜ் சென்டரில் மஜா.. நடிகையால் சிக்கும் சிவகார்த்திகேயன் - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்
மசாஜ் சென்டரில் மஜா.. நடிகையால் சிக்கும் சிவகார்த்திகேயன் - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்

ட்ரெண்டிங் செய்திகள்

சிவகார்த்திகேயனுக்குக் கடந்த சில நாட்களாகவே நேரம் சரியில்லை போல. பட்டக்காலிலேயே படும் கெட்டக்குடியையே கெடும். திரைத்துறைக்குள் மெல்ல வரத்தொடங்கும்போது கடனில் சிக்கித் தவித்த சிவகார்த்திகேயன் மெல்ல அதில் இருந்து மீண்டு வந்தார்.

இந்நிலையில் டி.இமான், சிவகார்த்திகேயன் தனக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். பலரும் சிவகார்த்திகேயனுக்கும் டி.இமானின் முதல் மனைவிக்கும் இருந்த திருமணத்தைத் தாண்டிய உறவினால் தான், டி.இமான் அவ்வாறு குற்றம்சாட்டியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இதனால் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளான சிவகார்த்திகேயன், அயலான் படத்தின் புரோமோஷனின்போது சூசகமாக வைக்கப்பட்ட கேள்விகளை அப்படியே தவிர்த்தார்.

இதனால் ஓரளவு சிவகார்த்திகேயனின் இமேஜ் சற்று தப்பித்தது. பொங்கலை ஒட்டி வெளியான அயலான் படமும் 50 கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஒரு பிரச்னை உருவாகியுள்ளது. சோனா என்ற நடிகையின் மசாஜ் சென்டரை, அண்மையில் சிவகார்த்திகேயன் நட்பு காரணமாகத் திறந்து வைத்தார். ஆனால், அந்த மசாஜ் சென்டரில் வேறு மாதிரியான தொழில் நடப்பதாக திரைவிமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பகீர் கிளப்பியிருக்கிறார். இப்பிரச்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்றாலும், சிவகார்த்திகேயன் திறந்து வைத்த மசாஜ் சென்டர் எனப் பேசியுள்ளார், பயில்வான் ரங்கநாதன். இதனால் கொதிப்படைந்த அந்த நடிகை சோனா, பயில்வான் ரங்கநாதன் மீது குண்டர் சட்டத்தில் போடக்கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் இதற்கெல்லாம் சற்றும் சளைக்காத பயில்வான் ரங்கநாதன், தான் எதற்காகவும் பயப்படத்தேவையில்லை என யூட்யூபில் பேசியுள்ளார். சிவகார்த்திகேயனை டி.இமானின் விஷயத்தில் வலைப்பேச்சு பிஸ்மியும் அந்தணனும் கிழித்து எறிந்த நிலையில், மற்றொரு விஷயத்தில் சிவகார்த்திகேயனை சிக்க வைத்துவிட்டு அமைதியாகிவிட்டார், பயில்வான் ரங்கநாதன்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்