தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Atharva: மீண்டும் போலீஸ் அதிகாரியாக அதர்வா

Atharva: மீண்டும் போலீஸ் அதிகாரியாக அதர்வா

Aarthi V HT Tamil
Feb 11, 2023 01:28 PM IST

நடிகர் அதர்வா தணல் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார்.

அதர்வா
அதர்வா

ட்ரெண்டிங் செய்திகள்

 'பட்டத்து அரசன்' படத்தில் இயல்பாக பக்கத்து வீட்டுப் பையன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்த இருந்தார். வணிக ரீதியாக அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் அதர்வா முரளி தற்போது புதிய படமான 'தணல்' வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறார்.

அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எம். ஜான் பீட்டர் படத்தை தயாரித்து உள்ளார். தற்போது 'தணல்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதர்வா. அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர் தயாரிக்கிறார்.

'100' & 'ட்ரிக்கர்' போன்ற படங்களில் சரியான கதையில் போலீஸ் கதாபாத்திர தோற்றத்திற்காக அதர்வா வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாகும் படம் 'தணல்'.

காப் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் 'தணல்' படத்தில், லாவண்யா திரிபாதி கதாநாயகியாகவும், அஷ்வின் காக்குமானு எதிர்மறையான கேரக்டரிலும் நடித்து வருகின்றனர். ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா, பரத், தௌபிக், சர்வா, பிரதீப் விஜயன் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் திரையரங்குகளில் படம் வெளியாகும் தேதி போன்றவை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்