தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Asin Divorce: கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு - அசின் எடுத்த அதிரடி முடிவு

Asin Divorce: கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு - அசின் எடுத்த அதிரடி முடிவு

Aarthi V HT Tamil
Jun 28, 2023 11:17 AM IST

நடிகை அசின் தனது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அசின், ராகுல் சர்மா
அசின், ராகுல் சர்மா

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர்ந்து விஜய், அஜித், கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். குறிப்பாக விஜய், அஜித் ஆகியோருடன் தொடர்ந்து 3 படங்கள் மேல் நடித்தார். கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட், மலையளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்தார்.

அசின் இந்தியில், ஹவுஸ்புல் படத்தில் அக்‌ஷய் குமாருடன் நடித்து வந்த போது தான் அவரின் நெருங்கிய நண்பரான ராகுல் சர்மாவை பார்த்து உள்ளார். இவர் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

ராகுல் சர்மாவிற்கு, அசினை பிடித்து

 போக இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் அந்த நட்பு, காதலாக மாற அசின் திரையுலகில் புகழின் உச்சத்தில் இருந்த போதே 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ராகுல் சர்மாவை இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு குடும்ப பெண்ணாக மாறினார் அசின். இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஆரின் என்ற பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் அசின், ராகுல் சர்மா தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அசின் தனது கணவருடன் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் நீக்கி உள்ளார்.

ராகுல் சர்மாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அசின் பல முறை கண்டித்தும் அவர் கேட்காத காரணத்தினால் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அசின் தற்போது தனது மகளுடன் அம்மா வீட்டில் வசித்து வருகிறாராம்.

அவர் புகைப்படங்களை நீக்கியதற்கான காரணத்தை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். நடிகை அசினும், ராகுல் சர்மாவும் விவாகரத்து செய்தி உண்மையாக இருக்க கூடாது என ரசிகர்கள் ஒரு பக்கம் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இது குறித்து அசின் வாய் திறந்தால் மட்டுமே பதில் கிடைக்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்