தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ajith Latest Family Picture Goes Viral

Ajith Family: ‘குழந்தைகளுடன் இருப்பது..’ வைரலாகும் ஷாலினி அஜித் போஸ்ட்

Aarthi V HT Tamil
Mar 13, 2023 11:07 AM IST

ஷாலினி அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஷாலினி அஜித் போஸ்ட்
ஷாலினி அஜித் போஸ்ட்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் அஜித் மற்றும் ஷாலினி தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நடிகை ஷாலினி அஜித் தனது குடும்பத்துடன் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அவர் பதிவிட்டு உள்ள அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதில், “குழந்தைகளுடன் இருப்பது ஆன்மாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என ஷாலினி கேப்ஷனாக அதில் பதிவு செய்துள்ளார்.

அஜித்- ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்கா, பெரிய பெண்ணாக ஷாலினி விட உயரமாக வளர்ந்து இருக்கிறார். அருகில் அவர்களின் மகன் க்யூட்டாக போஸ் கொடுத்து நிற்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஷாலினி அஜீத் தனது மகன் ஆத்விக் உடன் சென்னையின் எப்சி கால்பந்து அணி கலந்து கொண்ட கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக வருகை தந்தார்.

அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது வந்தது. ஐஎஸ்எல் என்று சொல்லப்படும் கால்பந்து தொடர் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் ஷாலினி பார்த்து ரசித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்